இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, April 1, 2012

இரு சக்கர வாகனத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது எப்ப‍டி? (0104 2012)

மழை டைம்ல முக்கியமான விஷயம் சைலன்ஸர்ல தண்ணி போறதுதான். இதனால கார்ப்பரேட்டர் போயிடும். சில சமயம்ஆக்ஸிலேட்டர் கேபிள் வழி யாவும் தண்ணி போக சான்ஸ் இருக்கு. இதை அவாய்ட் பண்ணவே முடியாது. தண்ணி அதிகம் தேங்கியிருக்கற பகுதியில வண்டி ஒட்டாம இருந்தா ஓரளவுக்குத் தவி ர்க்கலாம்.

*இன்னொரு விஷயம், வண்டியோட காயில்… இதுவும் நனையக் கூடாது. அப்படி நனைந்தா ஷார்ட் சர்க்யூட் ஆகி வண்டி நின்னுடும். இதுக்கு முக்கிய காரணம் வண்டியில் ஸைட் ஸ்டாண்ட் போடறது. இதனால காயில்ல ஈஸியா தண்ணி இறங்கிடும். ஸோ மழைல எப்பவும் சென்டர் ஸ்டாண்ட் போடுங்க.

* மழைல பிரேக் ஷூ சீக் கிரமா தேயும். ஸோ இந்த சீஸன்ல சடன் பிரேக் போடாம பொறுமையா வண்டி ஓட்டுங்க. வீல் பேரிங், ஸ்ப் ராக்கெட் பேரிங்ல தண்ணி போனா பேரிங் சீக்கிரம் போயிடும்.

* ஸ்கூட்டி போன்ற வண்டியில் பெல்ட் இருக்கும். இதுல தண்ணி போயிட்டா வண்டி ஈஸியா ஸ்லிப் ஆகிடும். மற்ற நாட்களைவிட மழைக்காலத்துல வண்டியை நிதானமா ஓட்டறது நல்லது. மத்தபடி மேலே சொன்ன எந்த விஷயத் தையும் தவிர்க்க முடியாது. எப்பவும் வண்டியை ஒழுங்கா மெயின் டெய்ன் பண்றவங்களும் மழையில் ஓட்டறதை தவிர்க்கிறவங்களும் தான் இந்த பிரச்னைகளிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.

* மழையில வண்டி தொடர்ந்து நனைஞ்சா கார்ப்பரேட்டர் உள்ளே தண்ணீர் போயிடும். இதனால வண்டி ஸ்டார்ட் ஆகுறதுல ஆரம்பி ச்சு ஏராளமான பிரச்னைகள் உ ருவாகும். எனவே தொடர்ச்சியான மழையில வண்டி ஓட்டுறதை அவாய்டு பண்றது நல்லது.

* வண்டியில கீ போடுற லாக்செட் மேல ஏதாவது கவர் போட்டு மூடிவைக்குறது நல்லது. ஏன்னா மழைத் தண்ணீர் தொடர்ந்து உள்ளே போயிட்டு இருந்தா ஷாக் அடிக்கக் கூட சான்ஸ் இருக்கு. ஸோ முன்னாடியே பாதுகாப்பா இருக்குறது நல்லது.

* வண்டியோட டயர் நல்ல கண்டிஷனா இருக்கான்னு செக் பண்ணிக்கங்க. ஏன்னா டயர் நல்ல கண்டிஷன்ல இருந்தாலே சடன் பிரேக் பிடிச்சோம்னா வண்டி ஸ்கிட் ஆக சான்ஸ் இருக்கு. தேஞ்சு போன டயரா இருந்தா பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால நல்ல டயரை யூஸ் பண்றது நல்லது.

* மழைக்காலங்கள்ல வண்டியில பிரேக் அப்ளை பண்ணும் போதுரொம்ப ஸ்லோவா பண்ணுங்க. சடன் பிரேக் போடுறது எப்பவும் உங்களுக்கு ஆபத்து தான்.

* வண்டியில எப்பவுமே ஏர் செக் பண்ணி வச்சுக்குறது நல்லது. ஏன்னா குண்டும் குழியு மான ரோட்டுல டிராவல் பண்ணும்போது இன்னும் வீல்ல காத்து இறங்கி உங்களை அவஸ்தைக்குள் ளாக்கும்.

* மழை சீசன் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உங்க வண்டியை சர்வீஸ் பண்ணி வச்சுக்குறது ரொம்பவே நல்லது.

* மழை சீசன்ல உங்க வண்டிக்குள்ள தண்ணீர் புகுந்து கேபிள், பிரேக் வயர்களையெல்லாம் லூசாக்கி வச்சிருக்கும். அதே நிலைமையோட தொடர்ந்து வண்டி ஓட்டுனா வண்டியோட கண்டிஷன் பாதிக்கப் படும். அதனால சீசன் முடிஞ்ச உடனே உங்க வண்டியை முறையா சர்வீஸ் பண்ணிக்குறது நல்லது.

* வண்டி தண்ணியில மூழ்குற அளவுக்கு இருந்தா ஓட்டவே வேண்டாம். ஏன்னா வண்டியோட சை லன்ஸர் உள்ளே தண்ணீர் புகுந்துச்சுன்னா உங்களுக்கு நிறைய செலவு வைக்குறதோட வண்டியோட கண்டிஷன் இன்னும் பாதிக்கப்படும்.

*காலையில வண்டியை எப்பவுமே ஸ்டார்ட் பண்ணும்போது கிக் ஸ்டார்ட் யூஸ் பண்ணுங்க.

Wednesday, January 11, 2012

நீ மாறுபட்டவள்தான்! (1101 2012)


கல்லைக்கூட
கனியவைத்தது
என்
கவிதை.
உன்னிடம் மட்டும்
அது
கல்லாய்ப் போனது.

என்
இதயத்தை
சுவாசித்திருக்கிறார்கள்
பலர்.
அதை
வாசிக்கக்கூட
முடியாமல் போனது
உன்னால்.

கருவண்டின்
கானத்தைக் கூட
ரசித்திருக்கிறார்கள்
அநேகம் பேர்.
உன்னால்
இந்த
குயில் பாட்டைக்கூட
சகிக்க முடியாமல் போனது.

நீர்மட்டம்
பார்த்து
ஆம்பல்கள் வளர்ந்தன.
நீ மட்டும்
ஆம்பலுக்காய்
நீர்மட்டத்தை மாற்றினாய்.

இந்த
நிலாவைப்பார்த்து
நின்று ரசித்தனர்
பலர்.
நீ - அதை
பிசாசு என்றாய்.

நீ
மாறுபட்டவள்தான்
பெண்களில்.
ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனாலும்,
ஒரே விடயத்தில்
நீயும்
பெண்தான்.
கற்களை தேடிக்கொண்டிருப்பதில்
வைரங்களை தவறிவிடுகிறாய்.

Wednesday, December 14, 2011

தனிநபர் கடன் வேண்டுமா! (1412 2011)

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங் குகி றோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண் டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமா னமாகக் காட்ட வேண்டி வரும்.

கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோ னைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார் கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்ப தால் எடுத்த தெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். என வே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்!

வங்கிகள் தற்போது தாராளமாக பர்சனல் லோன் தரக்காத்திருக்கின்றன. பொது வாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்ப டுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி போன்ற வை

1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற் று க்கு ஆதாரம் கொடுக்க வேண் டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாத ங்களில் கடனைத் திரும்பக் கட்ட லாம்.

பேரம் பேசலாம்!

உங்களின் சம்பளம் மற்றும் திரும் பக் கட்டும் தகுதி அதிகமாக இரு க்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனை க் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப்பொறுத்த வரையில் கடன் தொகை, திரும்பச் செலுத் தும் ஆண்டுகள், வேலை யின் தன்மை, சம்பளத் தொ கை, சம்பளம் வாங்குபவரா /தொ ழில் செய்பவரா, வாங்கு ம் நபரின் கடன் வரலாறு போன் றவற்றைப் பொறுத்து மாறுப டும். வங்கி கொடுக்கும் சலு கை அல்லது வாக்கு றுதியை எழுத்து மூலம் பெற் றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப் போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க!

ர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கி டப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? (Flat Rate) அல் லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண் டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொ த்த ஆண்டுக்கும் வட்டி கண க்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத் துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை 4,028-ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டு களில் வட்டி மட்டும் 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டி யைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை 3,476 -ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,205 குறைவாகக் கட்டி னால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கி கள் அவ்வளவு எளிதில் ஒப்புக் கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டி வரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 6-12 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொ த்தமாக அடைக்க ஒப்புக் கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.

நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்று க்கு மூன்று வங்கிகளில் வட்டி விகி தம், வட்டி கணக்கிடும் முறை, பரி சீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.

‘கிளீன் லோன்’

சில வங்கிகள் தனி நபர் கடனை ‘கிளீன் லோன்’ என்ற பெயரில்வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை பணி யாளர்கள், முன்னணி தனி யார் நிறுவனங்களின் நிரந்த ரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம் பளமாக இருந்தால் 36 மாத ங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகை யை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கடன்..!

சிலர் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள், பைக், சிறிய கார் போன்றவற்றை வாங்குகிறார் கள். கிரெடிட் கார்டை பொறுத் தவரை எடுக்கப்பட்ட பணத்துக்கு உடனடியாக வட்டி போடத் தொடங்கிவிடுகிறார் கள். இந்த வட்டி ஒரு ஆண்டுக்கு 40-45% இருக்கும். அந்தக் கடனை உங்களால் கட்ட முடியாத பட்சத்தில் அதனை இ.எம்.ஐ. கடனாக மாற்றிக் கொண்டால், வட்டி 25-30% ஆகக் குறையும்!

இன்றைக்கு டூ வீலர் என்பது நடுத்தர குடும்பத்தின் அடையாள மாக மாறிவிட்டது. வாகனக் கடன் என்பது ‘செக்யூர்டு கடன்’ (Secured Loan) வகையைச் சார்ந்தது. ஒருவர் வாங்கும் கடனுக்கு அவரின் வாகனமே ஜாமீன் அல்லது செக்யூரிட்டியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடனை முழு க்க திருப்பிச் செலுத்தும் வ ரை, வங்கி அல்லது நிதி நிறுவனத் துக்கு கார் மீதான முழு உரிமை யும் இருக்கிறது.

பொதுவாக 5,000 முதல் ஒரு லட்சம் வரை டூ வீலர் கடன் கிடை க்கும். வண்டியின் மதிப்பில் 15-20% கையிலிருந்து போட வே ண்டி வரும். இந்தக் கடனை மாதச் சம்பளக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவ சாயிகள் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.

கடனை 60 மாதங்களில் திரும்பக் கட்டலாம். கடன் தொகை 50 ஆயிரத்துக்கு மேலே செல்லும் போது மூன்றாம் நபர் கேரண்டி அல்லது என்.எஸ்.சி., சொத்து போன்றவற்றை அடமானமாகக்கொடுக்க வேண்டும். கார் கடன் வாங்குபவர் மாதச் சம்பளக்காரர் எனில், அவ ரின் மாதச் சம்பளத்தைப் போல் 24-36 மடங்கும், சுயதொழில் செய்பவர் என் றால், ஆண்டு வருமானத் தைப் போல் சுமார் 6 மடங் கும் கடனாகக் கிடைக்கும். கார் வாங்குபவரின் சம்ப ளம் போதாத பட்சத்தில், மனைவி அல்லது உறவினர் வரு மானம் ஈட்டுபவராக இருந்தால், அவரின் சம்பளத்தையும் சேர் த்துக் கொள்ளலாம்.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரி, வருமானம் போன்ற வற்று க்கான ஆதாரம், சம்பள ரசீது, ஃபார்ம் 16, ஆறு மாதத்துக்கான வங்கிக் கணக்கு விவரம், கையெழுத்துக் கான ஆதாரம் போன்ற ஆவண ங்களை மாதச் சம்பளம் பெறுப வர்கள் கொடுக்க வேண் டும்.

சுய தொழில் செய்பவராக இருந் தால், வருமானத்துக்கு ஆதார மாகக் கடந்த இரு ஆண்டுகளு க்கான வங்கிக் கணக்கு விவரத் தைக் கொடுக்க வேண்டும். கடனுக் கான வட்டி வங்கி களைப் பொறுத்து 9.5-15% ஆக இருக்கக்கூடும்.

கட்டணங்கள்

கார் கடன் வாங்கும்போது சில கட்டணங்களைச் செலுத்த வே ண்டி வரும். பரிசீலனைக் கட்டணம் 1-3% இருக்கும். இது தவிர, முத்திரைக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய் செலவு இருக் கிறது. ஆவணக் கட்டணம் ( 300-600) வேறு தனியாக இருக் கிறது.

பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கவும் கடன் கிடை க்கிறது. அதன் மதிப்பில் 60-70% கடன் கிடைக்கும். 5-7 ஆண்டு களுக்கு உட்பட்ட கார்களுக்குத்தான் கடன் கிடைக்கும். பழைய கார் கடனுக்கான வட்டி, புது காருக்கான கடனைவிட 2-3% அதிக மாக இருக்கும்.

Tuesday, December 13, 2011

கம்ப்யூட்டரைத் தாண்டி..(1312 2011)



பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி எல்லா துறைகளையும் புரட்டி போட்டு விட்டது.

மனிதன் தன்னால் செய்ய முடிந்ததை வேகமாகவும், செய்ய முடியாததை செய்யவும் தன் நுண் அறிவால் கருவிகளை உற்பத்தி செய்து ஒரு நாளை எந்த அளவு நீட்டிக்க முடியுமோ அந்தளவு நீட்டித்தான்.

ஆனாலும் சற்று ஆழமாக யோசித்தால் இத்தனை வளர்ச்சி அடைந்த இந்த கால வாழ்க்கை ஏதோ மின்சார ரயில் போல வேகமாகவும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய வாழ்க்கை நிதானமாக அனுபவிக்கும்மாட்டு வண்டி பயணமாகவும் இருந்து இருக்கிறது.

ஒரு நாள் முழுவதையும் செலவிட்டு நாடகம் பார்த்தார்கள்,
வாரக் கணக்காக விழாக்கள் கொண்டாடினார்கள்,
நடந்தே காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் போய் வந்தார்கள்.
இருந்தும் நிம்மதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதிக நிம்மதியை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பில் நாம் படைத்த கருவிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு இப்போது நம் நேரத்தை குறுக்கி விட்டதோ என்றும் நினைக்க முடியாது. ஏனெனில் முன்பு ஒரு மணி நேரத்தில் துவைக்க முடிந்த துணிகளை இப்போது ஐந்து நிமிடத்தில் மெஷின் முடிக்கின்றது.

அப்படி என்றால் நாம் சேமிக்கும் அந்த நேரமெல்லாம் என்ன தான் ஆகிறது?

மனிதனின் சராசரி வாழ்நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை ஓரளவிற்கு புள்ளி விவரங்கள் மீது ஆர்வம இருக்கும் எவருக்கும் தெரிந்திருக்கும்.

நாம் மிகவும் கஷ்டப்பட்டு சேமிக்கும் இந்த நேரமெல்லாம் கடைசியில் நம் வாழ்நாளில் இருந்து கழிக்கப் படுகிறதோ? என்ற எண்ணம் இப்போது உங்களுக்கும் வரலாம்.

சரி அப்படி என்ன தான் நான் சொல்ல வருகிறேன் என்று எவரேனும் அறிய விரும்பினால் அது "ஒன்றும் இல்லை" தான்.

இப்போது நாம் வாழும் வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை,
குழந்தைகள் பட்டாம்பூச்சி பிடிப்பதில்லை,
பாட்டி கதைகள் கேட்பதில்லை,
மாட்டு வண்டி சவாரி போவதில்லை,
கூட்டாஞ் சோறு ஆக்குவதில்லை,
இன்னும் எவ்வளவோ மகிழ்விக்கும் தருணங்களை அவர்கள் காண்பதே இல்லை என்று நினைக்கும் அதே நேரத்தில்,

அக்காலத்தில் கம்ப்யூட்டர் கண்டதில்லை,
இணையம் பார்த்ததில்லை, செஸ் ஆடியதில்லை,
டியூசன் போனதில்லை என்று நீட்டினால் அது வெறும் சப்பைக்கட்டாக மட்டுமே முடியும்.

இளம் வயதிலேயே கண் பார்வை மங்கி, வாயில் நுழையாத வியாதிகளை வாங்கிக் கொண்டு விஞ்ஞானம் தந்த விபரீதங்களை ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த கம்ப்யூட்டருக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதை உணர்ந்து கொண்டாலே பாதிக்கும் மேல் நேரமிருக்கும் நம் இளம் பிராயத்தினருக்கு.





ஏன் அப்படி செய்தாள்?...(1312 2011)

எனக்கொரு காதல் இருந்தது
வெயிலடிக்கும் சித்திரை மாத
சிறு மழையென
சட்டென என் முன்
வந்தவள் அவள்..
எல்லாவற்றுக்கும்
பதில் வாங்கும்
வாதத்தில் தோற்க விரும்பாத
அழுத்தக் காரியும் கூட

அவளை
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு
வெறுக்கவும் தோணும்..

அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
என எப்போதும் விரும்பும்
பிடிவாதக்காரி..

வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை..

ஒரு இரவின் மத்தியில்
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க,
மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

Wednesday, November 2, 2011

உள்ளத்தின் பதில் ... (0211 2011)





மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு பதில் வேண்டும்.
சொல்வாயா?


சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன் உன்னாலே...


நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?


என் நண்பா
பதில் தரட்டுமா .


சோகம் என்பது
உன்னை சுற்றி,
இருப்பதை காணும் போதும்
இறக்கும் போதும்
தொலைக்கும் போதும்,
நீ உண்டாக்கிக்கொள்வது!


கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும் ,
உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்
வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேட்காமல் போகும்போதும் ,
நீ உருவாக்கிக்கொள்வது.


இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது,
உதவி செய்வது,
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.


இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்...


என்னை நீ அறியவேண்டுமா?
உனக்குள் நான்
என்பதை போக்கி...
எனக்குள் நீ என
ஆகவேண்டும்.


அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.


மேல உள்ள அனைத்தும்
விலகும்.விடியல் பிறக்கும்.


என்னை நீ அறிவாய்.
உள்ளம் என்பது தெளிவு
அறிவு என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ உணர்ந்து வாழு...!

Tuesday, November 1, 2011

சிலர் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்! (0111 2011)

ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார்.

நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.

அவர் விக்கித்துப் போனார்.

சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.

திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக வரும் நாகேஷ் சொல்லும் வசனம் போல் “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அடுத்தவர்களின் சாதனைகளை இவர்களால் ரசிக்க முடியாது. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மனம் இவர்களுக்கு வராது. பலரும் பாராட்டினாலும் இவர்கள் வித்தியாசப்பட்டு விமரிசிப்பார்கள். அப்படி மாறுபடுவதாலேயே அவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். அதுவும் பிரபலங்களை விமர்சிப்பது என்றால் இவர்களுக்கு தனி உற்சாகம் வந்து விடும். அவர்களை விமரிசிப்பதாலேயே அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பில் இருப்பார்கள். தங்களை வித்தியாசமான அறிவுஜீவிகளாகக் காட்டிக் கொள்ள நினைப்பார்கள்.

குறைகள் கண்டிப்பாக சுட்டிக் காட்டப்பட்டால் தான் அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அப்படி திருத்திக் கொள்ளும் போது தான் மனிதன் முன்னேறுவதும், பக்குவம் அடைவதும் சாத்தியமும் கூட. ஆனால் நிறைகளை ஒரேயடியாகப் புறக்கணித்து விட்டு, குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடுவது என்பது நேர்மையான விமரிசனத் தன்மை அல்ல. மாறாக அது விமரிசிப்பவனின் தரத்தின் சிறுமையை சுட்டிக் காட்டி விடும்.

வாழ்க்கைக் கனவுகளை நனவாக்க நாம் எடுத்து வைக்கும் ஆரம்ப அடிகள் மிக மென்மையானவை. நமக்கு நம் மீதே முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்காத காலமது. நம் ஆரம்ப முன்னேற்றங்கள் எப்படி இருக்கின்றன என்பதை அடுத்தவர் வாய்வழியாக சில சமயம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அப்படிப்பட்ட சமயங்களில் இது போன்றவர்களின் கருத்தைக் கேட்கும் தவறைச் செய்து விடாதீர்கள். கேட்காமலேயே தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. அப்படி தெரிவித்தாலும் அதை அலட்சியப்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவர்கள் கருத்து, விதைத்தவுடன் ஊற்றப்படும் வெந்நீராக அமைந்து விடும். அந்தக் கனவு விதைகளை ஆரம்பத்திலேயே அழித்து விடும்படியான அமிலமாக இவர்கள் விமரிசனம் அமைந்து விடலாம். மன உறுதி மட்டும் இல்லா விட்டால் உங்கள் தன்னம்பிக்கை அப்போதே காணாமல் போய் விடும்.

எத்தனையோ திறமைகள் முளையிலேயே இவர்களால் கிள்ளி விடப்பட்டிருக்கின்றன. அதிலும் இவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் மற்றவர்களின் உற்சாகத்தையும், துடிப்பையும் கண நேரத்தில் காணாமல் போகும்படி பார்த்துக் கொள்வார்கள். இவர்கள் பேச்சுகள் எல்லாமே குறைகளையும், பலவீனங்களையும் சார்ந்ததாக இருக்கும். பேச்சுகள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற விதமும், சொல்கின்ற தோரணையும் கூட கிண்டல் நிறைந்ததாக இருக்கும். இவர்களை அலட்சியப்படுத்தி தூர நகர்வதே புத்திசாலித்தனம். எப்பாடுபட்டாவது இவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்று விடலாம் என்று நினைப்பது மலைக் கல்லில் கிணறு தோண்டுவதைப் போல் பலன் தரமுடியாத செயல்.

அதே போல ஒன்றைப் புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களிடமும் அதைக் குறித்த பாராட்டை நாம் எதிர்பார்க்கக் கூடாது. அறிஞர் அண்ணா அழகாகக் கூறுவார். “செவி பழுதுற்றவன் அருகில் சென்று சிதம்பரம் ஜெயராமன் என்ன அழகாய்ப் பாடினாலும் அவன் ‘இவருக்கு என்ன ஆயிற்று? இவர் வாய் ஏன் இப்படி கோணிக் கொள்கிறது என்றல்லவா நினைப்பான்?”. நகைச்சுவையாகத் தோன்றினாலும் சில நேரங்களில் நாமும் அதே போன்ற முட்டாள்தனத்தைச் செய்து விடுகிறோம். எதையும் பாராட்டவும், விமரிசிக்கவும் கூட அடிப்படைத் தகுதி இருந்தால் மட்டுமே அந்த பாராட்டும், விமரிசனமும் அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்.

எனவே பாராட்ட மனமில்லாதவனிடமிருந்தும், பாராட்ட தகுதி இல்லாதவனிடமிருந்தும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். முன்னவன் பாராட்ட மாட்டான். பின்னவன் பாராட்டு பொருளில்லாதது. மாறாக உள்நோக்கம் இல்லாத ஒருவன், உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தவன், உங்களைப் பாராட்டாமல் விமரிசித்தாலும் கூட அது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.