இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, June 22, 2011

தவறு... மன்னிப்பு... கவிதை(2206 2011)

சில முதல் அனுபவங்கள் -


சந்தோஷத்தை,
சஞ்சலத்தை,
சிலிர்ப்பை என்று ஏதோ ஒன்றை தருவதாக...

முதல் தவறு மட்டும்
அச்சத்தையும்,
முதல் மன்னிப்பு கோரல்
வெட்கத்தையும் தருவதாக...


மன்னிப்பு கோரலுக்கு பயந்தே,
பல தவறுகள் கருவிலேயே இறந்துவிடுகிறது,


பிறகு எல்லாம்
பழகி விடுகிறது.


செய்வதருக்கு எந்த தவறும்
கேட்பதற்கு எந்த மன்னிப்பும்
குற்ற உணர்வு தருவதில்லை...


அப்புறம் பார்த்துக்கலாம்
என்கிற மனநிலை இருக்கிற வரை
தவறுகள் தொடரும்...


கடவுளே எத்தனை
பெரிய தவறுக்கும்
பாவமன்னிப்பு தரும்போது...
மனிதர்கள் மீதான அச்சம் எதற்கு?


மன்னிப்பு கேட்கிற
எத்தனை பேருக்கு -
பாதிக்கப்பட்டவரின் மனநிலை புரியும்...


ஆனாலும்
தவறு செய்யாமல்
இருக்கப்போவதில்லை...
மன்னிப்பு கோராமலும்
இருக்கப்போவதில்லை...


எல்லாமே பாவனையாக,
மன்னிப்பு கேட்டு, கேட்டு...
மன்னிப்பு கொடுத்து, கொடுத்து -
மன்னிப்புக்கு மரியாதை
இல்லாமல் போனது...


மன்னிக்கப்படுவோம்
என்பதாலேயே பல
தவறுகள் செய்கிறோமோ...


ஒரு நொடிப் பொழுதில்
விழும் அடி,
ஆறுவதற்கு காலங்கள் ஆகுமே
என்பதை உணர்வதில்லை...


யாரோ ஒருவரின் தவறால் -
நான் பாதிக்கப்படும் போது,
தவறின் வீச்சு புரிகிறது...


மன்னிக்க முடியாத
இயலாமையும் பிடிபடுகிறது...

Tuesday, June 14, 2011

உஷாரா கவனிங்க!..(1406 2011)


என்ன கவனிப்பு எதை கவனிக்கவேண்டும் என அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்கதோன்றுமே இதோ உங்களுக்கான விடை.


குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனநலம் பாதிக்கும்

குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும் தான். குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கற்றுக்கொள்ளும் திறன்

இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.

சத்தமில்லாத மரணம்

இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து

இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில் தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது. அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.

குப்புற படுக்க வைப்பதை தவிருங்கள்

குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர். பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அரவணைப்பு முக்கியம்

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.

மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா?(1406 2011)

மனக்குழப்பம் என்பது எல்லோருக்குமே இருக்கிறது. மனக் குழப்பதை தீர்க்க அனைவரும் மருந்து தேடுகிறார்கள். மருந்தாக எதை எதையோ பெறுகிறார்கள். சில தற்காலிக தீர்வை தரலாம். ஆனால் மனம் -பூரண நிம்மதியை, குழப்பத்தில் இருந்தான விடுதலையை பெற முடியாது. மறு நாள் விடியும் போது, மனக்குழப்பமும் பூபாளம் பாடும். சரி, இதற்கென்ன தீர்வு...

முதலில் மனக்குழப்பம் ஏன் ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். நல்லது, கெட்டது என்று எல்லாமே ஏதோ ஒரு இடத்திலிருந்து தான் உதயமாகிறது. சிக்கல் விழுந்த கயிற்றின் சிக்கலை எடுக்க வேண்டும் என்றால், அதன் நுனியை தேடி எடுக்க வேண்டும்.

ஒரு முறை ஒருவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. வழக்கமாய் தான் வைத்தியம் பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். டாக்டர் மருந்து, மாத்திரைகள் தந்திருக்கிறார். இவரும் தொடர்ந்து உட்கொண்டிருக்கிறார். ஆனாலும் பாருங்கள். உடல் குணமடையவே இல்லை. டாக்டர் - அவரை பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும் கூட அவரது காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை. காய்ச்சலுக்கான காரணத்தையும் கண்டு பிடிக்க இயலவில்லை. வேறு சில டாக்டர்களும் வந்து பார்க்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை.

அவரது வாழ்க்கையை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கிறார்கள். கடந்த சில மாதங்களாக, அவர் எங்கெல்லாம் சென்றார், அவரது நடவடிக்கை, என்ன மாதிரியான உணவை உட்கொண்டார் என்று ஆராய்கிறார்கள். சில வாரங்களுக்கு முன், அவர் சில வெளிநாட்டுகளுக்கு சென்றிருக்கிறார். வெளிநாட்டு சிதோஷ்ன நிலை மற்றும் அவரது சாப்பாடு என்று நிறைய விஷயங்கள் அலசப்படுகிறது. ஒவ்வாமை போன்ற எதுவும் வந்ததா என்று கேட்கிறார்கள். கடைசியில் கஷ்டப்பட்டு அவரது காய்ச்சலுக்கான காரணத்தை கண்டு பிடிக்கிறார்கள்.

அவர் வெளிநாடு சென்ற போது ஒரு விலங்கின் இறைச்சியை சாப்பிட்டிருக்கிறார். அந்த இறைச்சியை அரைவேக்காட்டில் எடுத்து விடுவார்களாம். அதன் காரணமாக அந்த வகை இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு லேசாக காய்ச்சல் வருவது இயற்கை தானாம். உடனடியாக அந்த நாட்டு மக்கள் மாத்திரை உட்கொண்டு விடுவார்கள். இவருக்கு அது தெரியாது. சில தினங்களில் சென்னைக்கு வந்து விட்டார். காய்ச்சலும் வந்துவிட்டது. காய்ச்சலுக்கான காரணங்கள் தெரியாமல் குழப்பங்கள்.

கடைசியில் அவருக்கான மருந்து மாத்திரைகள் அந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது. ஒரு வழியாக, படிப்படியாக குணமடைந்தார். குழப்பங்களும் இனிதே நிறைவுற்றது. யோசித்து பாருங்கள். என்றோ சாப்பிட்டது. அது ஒரு நோயாக படிப்படியாக வளர்ந்துள்ளது. இப்படி தான் ஒவ்வொரு பிரச்சனைகளும், குழப்பங்களும் தீர்வுகளுக்கான வழிகளை அடைத்து கொண்டு அல்லது அதன் ஆரம்பம் தெரியாமல் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

மனித வாழ்வின் பிரச்சனைகளுக்கு, குழப்பங்களுக்கு இரண்டே காரணி. ஒன்று நம் அறியாமையால் "நமக்கு நாமே" என்பது போல - நம்மாலேயே ஏற்படுத்தி கொள்ள்ப்படுவது. அடுத்தது பிறரது செய்கையால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்... அதனால் ஏற்படும் குழப்பங்கள்... பிறரால் நமக்கு நிகழும் சங்கடங்களுக்கு முன், நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளும் சங்கடங்களை பார்ப்போமா?

எதற்கெடுத்தாலும் குழப்பம் அடைகிறவரும், எதற்குமே குழப்பம் அடையாதவரும் அருகருகே தான் வசிக்கிறார்கள் என்பது ஆச்சர்யப்பட தக்க உண்மை. அவர்கள் கணவன் மனைவியராக வாழ்கிறார்கள்... நண்பர்களாக இருக்கிறார்கள்... அப்பா பிள்ளைகளாக கூட இருக்கிறார்கள். ஒருவரால் குழப்பமில்லாமல் வாழ முடிகிறது... மற்றவரால் ஏன் அவ்விதம் வாழ முடியவில்லை... பார்ப்போமா?

எந்த ஒரு விஷயத்திற்கும் - நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அந்த அளவுக்கு அது வீரியமானதாகவோ அல்லது வீரியமற்றதாகவோ ஆகிறது. அடிபடுகிறது. சின்னதாக பேண்டேஜை போட்டு கொண்டு தங்கள் வேலைகளை பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். "அய்யோ எனக்கு அடிபட்டுடுச்சே" என்று அந்த காயம் ஆறுகிறவரை புலம்பி தவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் இரண்டு வகையாக உள்ளன. உண்மையிலேயே அவை பிரச்சனையை தரக்கூடிய விஷயம் தானா அல்லது நமது அறியாமையால் - அதை பிரச்சனைக்குரியதாக கருதுகிறோமா என்று பார்த்தாலே குழப்பத்திற்கு சிறிய விடிவு கிடைக்கும். அடுத்து என்ன செய்வது. குழப்பத்திற்கான காரணிகளை தேடி கண்டு பிடியுங்கள்.

மனக் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது ஒரு வகை சாதுர்யம். ஆனால் முடியவில்லை. பிரச்சனைகளை உருவாக்கி கொண்டோம். நிச்சயம், தலையை காவு கேட்கும் சிக்கல்கள் வெகு குறைவே. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று சொல்கிற அளவில் தான் பிரச்சனைகள் இருக்கும். அதனால் எதிர் கொள்ளலாம் - குழப்பமின்றி.

சில நேரங்களில் உங்களை ஆழ்த்தும் குழப்பங்களிடம் சவால் விடுங்கள். குழப்பங்கள் உங்களை ஜெயிக்கிறதா அல்லது நீங்கள் குழப்பத்தை ஜெயிக்கிறிர்களா என்று. போட்டி என்று வரும் போது மனம் இயல்பாகவே போராட துவங்கும். நீங்களும் அதிலிருந்து மீள்வீர்கள்.

Saturday, June 4, 2011

காலத்தோடு ஒத்துபோவதில்லை வாழ்க்கை..!காலத்தோடு ஒத்துபோவதில்லை வாழ்க்கை..! (0406 2011)



காலத்தோடு ஒத்துபோவதில்லை
வாழ்க்கை..!

ழைவேண்டி தவம் கிடக்கும் மனசு
‌எந்த மனம் நனைந்து களிக்கிறது
மழை வந்தவுடன்..!

பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
பூத்துக் காய்த்தவுடன்
கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!

நாட்களின் நேரம்
ஒருவனுக்கு போதவில்லை
ஒருவனுக்கு ஓடவில்லை
இருவருக்கும் பயன்படாமல்
பயணப்படுகிறது கடிகார முட்கள்...!

சித்த போது கிடைக்காத உணவு
விருந்தாக வரும்
விரும்பாதபோது..!

னிமைத்தேடி அலைவோம்
எங்கிருந்து விடும்
நம் இதயத்தின் ஓலங்கள்..!

திர்ப்படும் அறிந்தமுகங்கள்
இன்பத்தைவிட இன்னல்களையே
அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!

னிமூட்டம் போல்
வாழ்க்கையை மூடிக்கொண்டிருக்கிறது
அதற்கான போராட்டங்கள்..!

ணம்தேடும் வாழ்க்கையில்
முடிந்துப்போகிறது
நம் பயணம்...!

நிகழ்கால வெப்பத்தில்...
நிக‌ழ்கால குளிரில்...
நிகழ்கால கதகதப்பில்
வாழவிரும்புவதில்லை எவரும்...

டி முடித்தப்பின் ஒவ்வொருவருக்கும்
மருந்தாகிறது மரணம்..
ண்மைதான்
வாழ்க்கை ஒருநாளும்
காலத்தோடு ஒத்துபோவதில்லை..!