இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Friday, February 18, 2011

ஹாஸ்டல் காம்பவுண்ட் (1802 2011)

காலேஜ்ல பசங்கள சேர்க்கணும்னு முடிவு பண்ணுன உடனே பெத்தவங்க பையன் கிட்ட சொல்ற அடுத்த வார்த்தை ' நீ ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கணும். வெளிய தங்குனா கெட்ட பசங்களோட சேர்ந்து கெட்டு போயிடுவ. '

காத கொடுங்க சார் - 'நீங்க சொல்றது நூத்துக்கு நூறு தப்பு .. ஹாஸ்டல்லதான் எல்லா அயோக்யதனமும் நம்ம பையனுக்கு அறிமுகம் ஆகும் . எப்படின்னு கேக்கறீங்களா? வெளிய ரூம் எடுத்தான்னா கூட இருக்கறவன் சரி இல்லேன்னா வேற எடத்துக்கு போயிடலாம். ஆனா ஹாஸ்டல்ல அப்படி இல்ல.. இவன் ரூம்ல பசங்க ஒழுங்கா இருந்தாலும் , சுத்தி இருக்குற நூறு ரூம்ல வெந்தது, வேகாதது, அரைவேக்காடுனு நூறு விதமா பசங்க இருப்பாங்க. நல்லா என்ஜாய் பண்ண ,கெட்டு போக options அதிகம். ஒரு வருசத்துல்ல கேங் சேர்த்துட்டு அடுத்த வருஷம் அவனுகளே ஒரே ரூம்மேட்ஸ் ஆகிடுவாங்க.. புரிஞ்சிக்கோங்க '

(இந்த ரகசியத்த சொல்லி எத்தன பசங்க சாபத்துக்கு ஆளாக போறேனோ? சரி பரவாயில்ல...பெத்தவங்க ஆசிர்வாதம் என்னை காப்பாத்தும் )

ஹாஸ்டல்ல நடக்கற வேடிக்கை உலகத்துல வேற எங்கயும் பாக்க முடியாது.

ஒரு ரூம்ல ஒருத்தனுக்கு நைட்டுலதான் படிக்க மூடு வரும். இன்னொருத்தனுக்கு லைட் போட்டிருந்தா தூக்கம் வராது. ' டேய் .. லைட் ஆப் பண்ணுடா..லைட் ஆப் பண்ணுடா 'னு ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ கத்தி , படிக்கற பையன அழுக வெச்சுடுவான். சரி காலைல , நேரத்துல எந்திரிச்சாவது படிப்போம்னு அலாரம் வெச்சா , இவன் தூங்குன உடனே அடுத்தவன் அலாரத்த ஆப் பண்ணிடுவான்.

காலைல நம்ம புத்திசாலி ஏன் அலாரம் அடிக்கலைன்னு கிளாக்க செக் பண்ணுனா நம்ம பையன் அப்பாவியட்ட முகத்த வெச்சுட்டு ' அது அடிச்சுது மாப்ள .. நீதான் ஆப் பண்ணிட்ட'னு சொல்லுவான். இந்த லூசு அத நம்பி நாளைக்கு எப்படியாவது எந்திரிச்சு படிச்சிடனும்னு முடிவு பண்ணுவான் . அடுத்த நாளும் இதேதான் நடக்கும் .
-------------------------------------------------------------------

அடுத்த தொல்லை - ஒரு ப்ளோருக்கு ஒரே போன்தான் இருக்கும் . யாராவது பையன் அவங்க அப்பா அம்மா கூட பேசிட்டு இருந்தா , அந்த பக்கமா போறவன் சும்மா போக மாட்டான் .. ' டேய் , தம்ம கீழ போடுடா.. வார்டன் வராரு ' னு போன்ல கேக்குற மாதிரி பத்த வெச்சுட்டு எடத்த காலி பண்ணிடுவான் .
ஏற்கனவே நம்ம பெத்தவங்களுக்கு பையன் மேல ரெம்ப நம்பிக்கை .. இதுல புதுசா இது வேற .

தப்பி தவறி எவனாவது ஒருத்தனுக்கு காலேஜ்ல பிகர் செட் ஆகிருக்கும். நம்ம ஆளுக்குதான் பெருமை ஜாஸ்தியே. லவ் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு , அதே ஹாஸ்டல் ஒரு பத்து ரூபாய்க்கு சமோசா வாங்கி கொடுத்துட்டு பசங்கள ஒரு ரெண்டு மணி நேரம் அறுத்து எடுத்துருப்பான்.அத நம்ம பசங்க ஞாபகம் வெச்சுகிட்டு , அந்த பொண்ணு போன் பண்ணுனா கீழ இருந்து கத்துவானுக ' ரூம் நம்பர் 39 , சரவணனுக்கு போ.........ன்.. வாடா உன் மூணாவது ஆளு லைன்ல இருக்கு '..

இவன் வேகமா ரூம விட்டு ஓடி போறதுக்குள்ள அங்க ஒரு சின்ன கூட்டமே சேர்ந்துருக்கும்.. போனை கைல கொடுத்துட்டு 'பேசுடா மச்சி ..ஹிஹி'னு சொல்லி பக்கத்துலயே நிப்பானுக.. இவன் என்னத்த பேச முடியும் .. ? அந்த பக்கம் இருக்குற லூசுக்கு அது எதுவும் புரியாது .எதாவது பேசிட்டே போகும்.. இவன் போன வையின்னு சொல்ல முடியாம ஒரு மணி நேரமா 'அப்புறம் ..அப்புறம்..அப்ப்புறம்..'னு சொல்லிட்டே இருப்பான்.


சரி இந்த தொல்லைக்கு செல்போனயாவது வச்சிக்கலாம்னு பாத்தா , காலேஜ் ரூல் போட்டுருப்பாங்க -' நோ செல் போன் இன் காலேஜ் ப்ரிமிசஸ்' அப்படின்னு.

------------------------------------------------------------------------

அடுத்து எவனுக்காவது பர்த்டே வந்தா , அவன் அன்னைக்கு இருந்து 'இனி பர்த்டேவே கொண்டாடகூடாது'னு முடிவு பண்ற அளவுக்கு அவன நடுராத்திரி பன்னெண்டு மணிக்கு எழுப்பி , கேக்க முகம் பூரா அப்பி , முட்டை , தக்காளின்னு மிக்ஸ் பண்ணி அபிஷேகம் பண்ணி ,அவன குளிக்க வெச்சு ' அடுத்த நாள் கிளாசுக்கு வரும்போது ஏதோ ஆக்சிடெண்ட்ல அடி பட்டவன் மாதிரி இருப்பான். இத்தனையும் பண்ண நம்ம பசங்களுக்கு செலவு அதிகபட்சம் முப்பது ரூபாய்.

இத்தனையும் பண்ணிட்டு வருத்தமே படாம அப்புறமா அன்பா கேப்பாங்க . 'மச்சான் ட்ரீட் எங்கடா போலாம்'னு ..

----------------------------------------------------------------------------

எல்லா ஹாஸ்டல் உள்ளேயும் வார்டன்னு ஒரு காமெடி பீஸ் சுத்திட்டு இருக்கும். பர்ஸ்ட் இயர் பசங்க இவர மதிச்சு நடப்பாங்க . செகண்ட் இயர் வந்துடுச்சு .. இப்ப அந்த ஆள் எதாவது பேசினா அவளவுதான். சண்டை எல்லாம் போட மாட்டாங்க. 'போ.. போ.. பெரியவங்க பேசிட்டு இருக்கோம் .. நீ போயி டீ ரெடி ஆயச்சானு கவனி 'னு சொல்லிட்டு அவங்க அலப்பரைய கன்டினியு பண்ணுவாங்க. அதுக்கும் மேல எதாவது வேற எங்கயாவது கம்ப்ளைன்ட் பண்ணிடாருனு வைங்க .. அதுக்கப்புறம் இவங்க எதிர் நடவடிக்கை பயங்கரமான சதி நிகழ்வுகளா இருக்கும் .

அவர்கள் கடைபிடிக்கும் போர்கால உத்திகள் சில :
  • வார்டன் ரூம (அவர் தூங்கும்போது) பூட்டிறது.
  • அவர் கீழ நடந்து போய்ட்டு இருக்கும்போது மேல இருந்து ஒரு முழு பக்கெட் தண்ணிய கொட்டறது.
  • டைம் பாம் மாதிரி ஊதுபத்தியில பட்டாச கட்டி , அவர் இல்லாதப்போ ரூம்ல கொளுத்தி போடறது..
  • பர்ஸ்ட் இயர் பசங்ககிட்ட அவர் பேசிட்டு இருக்கும்போது , எங்கயாவது ஒளிஞ்சு நின்னுட்டு 'டேய் ..'னு அவர் பேர சொல்லி கத்தறது.
  • அவர் ரூம் ஜன்னல் வழியா உள்ள இருக்கிற பொருட்கள் எல்லாத்தையும் கீழ தள்ளி விடறது. முடிஞ்சா வெளிய எடுத்து நாலு பேருக்கு அன்பளிப்பா கொடுக்கறது..
இந்த மாதிரி அஹிம்சை வழிலதான் அவரை பழிவாங்குவாங்க. என்ன இருந்தாலும் அவர் வயசுல பெரியவர்.. அதனால கை எல்லாம் வைக்க மாட்டாங்க.

குறிப்பு : இது வார்டன் கூட இருக்கும் ஜால்ராக்கள் , அவரை சப்போர்ட் செய்யும் ஹாஸ்டலில் தாங்கும் வாத்தியார்களுக்கும் பொருத்தும்.

ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டன் வேலைய ரெண்டே ரெண்டு வருஷம் பாத்தா போதும் . வெளிய எந்த கஷ்டமான வேலையையும் பாத்துடுவீங்க. வடிவேல் பாணில சொல்லனும்னா ' நீங்க அடிச்சா அடி அப்படி ஒரு அடிடா. அந்த அடிக்கு அப்புறம் எவன் அடிச்சாலும் தாங்கற பலம் வந்துருச்சுடா...'

-------------------------------------------------------------------------------------------------

எதாவது புது படம் ரிலீஸ் ஆனாத்தான் வம்பே.. ஹாஸ்டல் பசங்கள கடுப்பேத்தரதுக்காகவே , day scholar பசங்க கேப்பாங்க ..'உங்களுக்கு என்னடா பிளான் .. ? நாங்க இன்னைக்கே நைட் ஷோ போறோம்' .. இது பத்தாதா.. ஒருத்தன் ஆரம்பிப்பான்


' கம்ப்யூட்டர் கிளாஸ் லேட் ஆகிடுச்சுன்னு சொல்லுவோம்டா '

'அறிவுடா உனக்கு.. எந்த கம்ப்யூட்டர் கிளாஸ் ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருக்கு ?'

'சரி விடு .. இந்த ரமேஷ் பையனுக்கு உடம்பு சரியில்ல .. டாக்டருக்கு கூட்டிட்டு போயிட்டு வரோம்னு சொன்னா ?'

'ஹ்ம்ம் .. பாப்போம் '
-----------------------------

'என்னங்கடா..நைட் ரெண்டு மணிக்கு வந்திருக்கீங்க. நீங்க சொல்ற கதைய நம்பவா என்னை இங்க வேலைக்கு வெச்சிருக்காங்க? நாளைக்கு எல்லாம் அவங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க '
'சார் .. அப்பா ஊருல இல்ல சார்.. '

'அம்மா?'

'அவங்க அப்பா இல்லாம எங்கயும் வரமாட்டாங்க சார் '
'போன் பண்ணுனேன் சார்.. ரிங் போய்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்டீங்கறாங்க ..'

'எங்க நம்பர் கொடு பாப்போம்..'

'இருங்க சார் ..மறுபடியும் ட்ரை பண்றேன்.'

'சார் ..இந்த ஒரு தடவ விட்டுருங்க சார் ..'

'ஏன்டா கெஞ்சற? எங்க அப்பா வரட்டும்டா.. நான் கூட இங்க நெறைய ப்ராப்ளம் இருக்குனு அப்பாகிட்ட சொல்லணும்.. உனக்குத்தான் தெரியுமே .. எங்கப்பா பிரின்சிபாலுக்கு தெரிஞ்சவர்னு..'


'சரி சரி இதான் லாஸ்ட் வார்னிங் .. கிளாசுக்கு போங்க '

அதுல்ல இன்னொரு கொடுமையான விஷயம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும். ஏறக்குறைய எல்லா காலேஜ் மேனேஜ்மெண்டும் இந்த தப்பான கணக்க போடுறாங்க ; அது என்னன்னா , பொண்ணுக ஹாஸ்டலுக்கு மெஸ் பீஸ் எப்போவும் பசங்க ஹாஸ்டல விட ஆயிரம் ரூபா கம்மியா இருக்கும் - பசங்க மெஸ் பீஸ் பார்த்து டென்ஷன் ஆகிடுவாங்க.

ஏதோ பொண்ணுகளுக்கு சாப்பிடவே தெரியாத மாதிரியும் , பசங்க அதுக்குதான் காலேஜ் வந்துருக்கற மாதிரியும் அவங்க எண்ணம். உண்மை என்னனா பொண்ணுகளுக்கு காலேஜ்ல இருக்குற ஒரே பொழுதுபோக்கு சாப்பிடறதுதான் . பசங்க அங்க இங்கன்னு சுத்திட்டு எதோ ஹாஸ்டல் பக்கம் வரும்போது சாப்பிடுவாங்க. அதுவும் காலைல நம்ம பசங்க கரெக்டா கிளாஸ் ஆரம்பிக்க பத்து நிமிஷம் முன்னாடிதான் எந்திரிப்பாங்க . so ப்ரேக்பாஸ்ட் பெரும்பாலும் கட்.

ஆனா பொண்ணுக 'அதிகாலை விழித்தெழுந்து படிப்பதனால்' கரெக்டா சாப்பிட்டு கிளாசுக்கு வருவாங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு பெஞ்சுல நாலு பசங்க அசால்டா அம்சமா பிட் ஆவோம் . பொண்ணுக மூணு பேருக்கே பெஞ்ச பாகம் பிரிப்பாங்க . அப்போ யாருப்பா அதிகமா சாப்பிடறது ?

--------------------------------------------------------------------------------------

ஹாஸ்டல்டேனு வருஷம் ஒரு வெளங்காத நாள் வரும் .. நைட்தான் கச்சேரி களைகட்டும்.. இந்த நேரத்துலதான் பசங்க பகை எல்லாம் தீர்த்துக்குவாங்க.. எங்க இருந்தாவது ஒரே ஒரு குவார்டர் வாங்கிட்டு வந்து அத பதினாறு பேரு தீர்த்தம் மாதிரி அடிச்சுட்டு , பயங்கர போதைல இருக்கற மாதிரி எவன அடிக்கணுமோ அவன அடிக்கவோ இல்ல பஞ்ச் டயலாக் பேசவோ ஒரு நல்லா வாய்ப்பா பயன்படுத்திக்குவாங்க.. அடுத்த நாள் எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி நடந்தத மறந்துருவாங்க..

இத்தனை அடாவடி நடந்த பின்னாடி , காலேஜ் கடைசி நாள் எல்லாரும் பிரியும்போதுதான் ஒரு உண்மை புரியும் .. 'இந்த உருப்படாதவனுகள பாக்காம எப்படி இருக்க போறோம்'னு.. அப்போ கண்ண கட்டிட்டு வர கண்ணீர்தான் சின்ன வயசுல பொம்மை வாங்கி தரலேன்னு அழுததுக்கு அப்புறம் வர நிஜமான கண்ணீர் .
அதுக்கப்புறம் எப்போவும் அப்படி உண்மையா அழுகவும் மாட்டோம்...


செஞ்சது எல்லாம் தப்புன்னு நெறைய பேருகிட்ட மன்னிப்பு கேக்கத் தோணும் .. ஆனா இது வரைக்கும் கேட்டுருக்க மாட்டோம்..


இப்படி இவ்வளவு கலாட்டா நடந்த ஹாஸ்டல எப்படிங்க மறக்க முடியும் ? ஒரு தடவ டைம் இருந்தா போயிட்டு வாங்க.. தனியா
போகாதீங்க.. மறுபடியும் அழுவீங்க.. பசங்களோட போங்க..




இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய சில டிப்ஸ் (1802 2011)



னது நண்பருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருந்தது, அவரை தற்போது சந்தித்தேன் அவர் முதலில் துபாயில்தான் இருந்தார் திருமணத்திற்காக இந்தியா சென்று திருமணம் முடித்து கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூர் வந்தவரைத்தான் நான் சந்தித்தேன், பரஸ்பரம் நல விசாரணை முடிந்த பின் ”என்ன பொண்டாட்டி தொறத்தி வுட்டுடிச்சா?” எனக்கேட்டேன், அதற்கு நண்பர் ”இல்லப்பா பொண்டாட்டி தொறத்தல நானாதான் விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்”. என்றார் வருத்தத்துடன்.
எனக்கு ஏன்தான் கேட்டோமோ என ஆகிவிட்டது., பிறகு காரணங்களை கேட்டவுடன் என்ன நேர்ந்தது அவர் வாழ்வில் ஏன் இப்படி சீக்கிரம் விரக்தியாகி விட்டார் எனத்தெரிந்து கொண்டேன்.

ரி அதையும் அதனுடன் சேர்த்து நமது கருத்துகளையும் கொண்டு ஒரு பதிவாகப் போடலாமே என் என்னியதன் விளைவு தாங்கள் தற்போது படித்துக் கொண்டு இருப்பது...

சிலருக்கு திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே விரக்தி, சிலருக்கு திருமணம் ஆகி 30 வருடங்கள் ஆனாலும் எலியும், புலியும்தான்.. உலகில் நிறைய பேர் வாழ்க்கையை வாழத்தெரியாமல்தான் ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

சாதாரணமாக பேசும் போது கூட திருமணம் என்றதும் ”குழி வெட்டியாச்சு” என கிண்டல் செய்கிற அளவில்தான் இருக்கிறது..

ன்? திருமண வாழ்வில் இணையும் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்களா? நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும் நபர்கள் இல்லையா? ஏன்? அதற்கு என்ன செய்யலாம் என சற்று பார்ப்போம்..

திருமணம் என்றவுடனையே ஒரு ஆண் பொதுவாக என்ன நினைக்கிறான், அப்பாட நமக்கு ஒத்தாசைக்கு நமது வேலைகளையெல்லாம் பங்கு போட ஒரு ஆள் கிடைத்தாகிவிட்டது என்ற நினைப்புதான் முதலில்., பிறகுதான் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற நினைப்பு வருகிறது.

பெண்னும் சளைத்தவளில்லை சிக்கிட்டான்டா ஒரு அடிமை என்கிற போக்குத்தான், ஆக ஒருவருக்கொருவர் தனக்கு சாதகமாக வருகிற துணையை தன்னுடைய அடிமையாக எப்படி அமைத்துக்கொள்வது, முழுக்க முழுக்க தன்னுடைய சுய நலத்திற்காக தன்னுடைய கணவனையோ அல்லது மனைவியையோ எப்படி மாற்றிக்கொள்வது என்கின்ற திட்டத்தில்தான் இருக்கின்றனர்., இதில் நண்பர்களின் மற்றும் உறவினர்களின் திட்டம் வேறு, சில இடங்களில் சேர்ந்திருக்கும். திருமணத்தின் மூலம் கிடைக்கும் துணையை தனது வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஆழமான நட்பாக பார்ப்பவர்கள் மிக. மிகக் குறைவு.

திருமண வாழ்க்கையைப் பற்றிய நிறைய கனவுகளுடனும், ஆசைகளுடனம் வருபவர்கள் ஏன் அடிப்படை சற்தோஷங்கள் கூட அடிபட்டு போனவர்களாக மாறுகிறார்கள்..? இதற்கான விடை தன்னிடம்தான் இருக்கிறத என தேட மறந்தவாகளாக அல்லத தேடத் தெரியாதவர்களாகத்தான் திருமண வாழ்க்கையைப் பற்றி எதிர்மறையாக புலம்புபவர்களில் பெரும்பாலோனோர் இருக்கிறார்கள்.

நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம், நான் அவளு(ரு)க்கு என்ன கொறை வச்சேன், அவருக்கு அதபண்ணினேன், இத பண்ணினேன். இருந்தும் என் வாழ்க்கையில சந்தோஷமில்லை என்ற புலம்பல். என்ன காரணம், ஏன் இந்த நிலை சற்று நிதானமாக, நடு நிலையாக, அமைதியாக யோசிக்க வேண்டிய விசயம்தான் இது..



தூண்டி விடுதல்...


திருமணமான பெண்ணிடம் திருமணமான முதல் நாளே உறவினர்கள் சிலர் சொல்வதுண்டு ”நன்றாக கணவனை முடிந்து வைத்துக்கொள், ஃபிரியா விட்டுடாதே, அது செய்ய விடாதே, இது செய்ய விடாதே, ஆம்பளைங்க அப்படி, இப்படி என இல்லாதது பொல்லாத்து அனைத்தையும் சொல்லி மனதை கலைத்துவிடுவார்கள், இந்த சேவை செய்றதுக்கே உடம்புல உயிர் தாங்கி நிறைய பேர் சுற்றி வருகிறார்கள், ஆண் நண்பர்களும் சிலர் அப்படித்தான், (ஆனால் பெண்களின் சதவீதம்தான் உயர்வு) இவர்களுக்கு முக்கியமான விஷ(ய)ம் என்னவென்றால் மற்றவர்கள் யாரும் சந்தோஷமா இருக்கக்கூடாது., அப்படி சபதம் எடுத்துக் கொண்டுதான் இந்த உலகில் வாழ்கிறார்கள். (ஒரு பெண்ணிற்கு அவரின் அம்மாவே அந்த மாதிரியான வேலையைச் செய்தார். என்னவென்று சொல்வது)
திருமணம் ஆன அன்றோ, அல்லது அதற்கு முன்போ, பின்போ இப்படி சொன்னால் தம்பதிகளின் மன நிலைமை எப்படி மோசமானதாக மாறும்,.. அப்படி மாறுவதுதான் இந்த மாதிரியான கயவர்களின் வெற்றி.

ந்த மாதிரியான நண்பர், சொந்த பந்தம் என்ற போர்வையில் திரியும் குள்ளநரிக்கும்பலை அடையாளம் கண்டு அவர்களை விட்டும் நாம் தள்ளி இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதான். அதுவும் எந்த ஒரு விசயமானாலும் அதை தன்னுடைய சுய புத்தியால் ஆராய்வது தான் நலம்பயக்கும் மாறாக சொல் புத்தி என்பது துன்பத்திற்கான தூண்டு கோளாகத்தான் அமையும்.




எதிர்பார்த்தல்...


பொதுவாக கணவன் மனைவியிடம் திருமணம் முடித்து வந்தவுடன் சிலவிசயங்களை எதிர் பார்க்கிறான். மனைவியானவள் தனக்கு கால் அமுக்க வேண்டும், கை அமுக்க வேண்டும், துணி துவைக்கனும், அது பண்ணனும், இது பண்ணனும் என அவனுடைய எதிர்பார்ப்பின் வரிசை மிக நீளமாக இருக்கிறது,

னைவியும் தன்னுடைய கணவன் தனக்கு நகை வாங்கித்தரனும், அதுவாங்கித்தர வேண்டும், இது வாங்கித்தரனும், அங்கே கூட்டிட்டு போகனும், இங்கே கூட்டிட்டு போகனும், பெருக்கனும், சமைக்கனும், என தனக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என ஒரு நீண்ட பட்டியல் வைத்திருக்கிறாள், (இதுல மாமியாருங்க வேற வீட்டுக்கு புதியதாய் ஏதே வேலைக்காரி வந்துவிட்டது போல மருமகளை வேலை வாங்கனும்னு நெனைக்கிறது ). ஆக இவர்களின் பட்டியலில் உள்ள எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது, அவர்களின் மனம் கடினமாக மாறுகிறது. ஏமாற்றம் என்பது துன்பத்தின் அசைக்க முடியாத காரணம்.

ணவனோ, மனைவியோ., தயவு செய்து தனக்கு கணவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மனைவியோ, மனைவி தனக்கு என்னவொல்லாம் செய்ய வேண்டும் என கணவனோ, எதிர்ப்பார்ப்பதைத் தவிர்த்திடுங்கள். மாறாக நான் அவளுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும், நான் அவருக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வகைப்படுத்திப் பாருங்கள்,, உங்கள் வாழ்க்கையில் கசப்பிற்கு இடமே இல்லை




விட்டுக் கொடுத்தல்...


து கணவன், மனைவிக்குமிடையே கருத்து மோதல்கள் வரும் போது, கருத்துக்களின் வலிமை ஏற்ற இறக்கமாகும் போது ஒருவருக்கு ஒருவர் கண்டிப்பாக விட்டுக் கொடுக்க வேண்டும். நன்றாக கவனியுங்கள் விட்டுக் கொடுத்தல் என்பது ஒருவர் பக்கமே இருத்தல் சரியல்ல கணவனும் விட்டுக்கொடுக்க வேண்டும், மனைவியும் விட்டுக் கொடுக்க வேண்டும், கணவன் மட்டுடே விட்டுக் கொடுத்தலோ அல்லது மனைவி மட்டுமே விட்டுக் கொடுத்தலோ வாழ்வின் இனிமையை சீக்கிரம் சீர்குழைத்துவிடும் என்பது நிதர்சனம். விட்டுக் கொடுத்து வாழ்வதில் ஒரு திருப்தியிருக்கிறதே நிச்சயமாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.



புரிந்துக் கொள்ளுதல்...

னைவியோ, கணவனோ தாம் துணையை பரஸ்பரம் புரிந்து கொண்டு நடத்தல் அவசியம். தன் கணவரின் போக்கு இப்படித்தான் அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, இதை அவர் கண்டிப்பாக ரசிப்பார், இது அவருக்கு கோபத்தை வரவழைக்கும் என்று குறிப்பறிந்து புரிந்துகொண்டு நடத்தல் நலம், கணவனும் தன்னுடைய மனைவி இதைச்செய்தால் மகிழ்வாள், இதை வெறுப்பாள் என புரிந்துகொண்டு நடந்தால் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.. நமக்காத்தான் நம் மனைவி, அவளுக்காகத்தான் நான் என்பதை முதலில் சரியாக புரிந்ததுக் கொள்ள வேண்டும்.






அன்பு காட்டுதல்...


ன்பு என்றால் சின்ன சின்ன விஷயங்களில் காட்டும் அன்பு கூட வாழ்க்கை பந்தத்தில் பெரிய அளவில் பலன் கொடுக்கும். கணவன் வேலைக்கு போய் வருகிறான் என்றால், அவனிடம் நான்கு வார்த்தைகள் ஆறுதலாக பேசக்கூட நிறைய மனைவிமார்கள் தயாராக இல்லை. வெளியே இருந்து வந்த ஆணிடம் கொஞ்சம் நன்றாக பேசி ஒரு வாய் காபி கொடுப்போம் என்பது நிறைய வீடுகளில் நடப்பதில்லை . பெரும்பாலும் வீட்டிலுள்ள பெண்களுக்கு தொலைக்காட்சிதான் பாதி இல்லை இல்லை முழு குடும்பமும். இந்த... செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கும் ஈயப்படும் கதைதான். தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில்தான் அவர்களுக்கு வீடு பற்றிய ஞாபகமே வருவதுண்டு. கொஞ்சம் தண்ணி கொடேன் என கணவன் கேட்டால், சும்ம இருங்க பாத்துட்டு இருக்கேன்ல போய் மொண்டு குடிங்க, இதுக்கு ஒரு ஆள் வேணுமா? பெரிய கலக்டர் உத்யோகம் பார்த்துட்டு வந்த மாதிரிதான் வேலை ஏவுறது (கலக்டர் வீட்டுல எப்படின்னு கலக்டருக்குத் தானே தெரியும் பாவம்) என்ற கடும் சொல் தடையில்லாமல் வந்து விழும்.

ணவன்மார்களும் இதற்கு சளைத்தவர்களில்லை மாப்பிள்ளை விடுப்பு தினங்களில் கூட தினத்தந்தியிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கி இருப்பார் தன் மனைவி, கஷ்டப்பட்டு! வேலைகள் செய்கிறாளே கொஞ்சம் ஒத்தாசையா இருப்போம் என்ற மனநிலைமை ஐயாவிற்கு இருக்காது. இல்லையென்றால் வெளியே ஊர் சுற்றலாம் வாங்க அப்படின்னு கிளம்பி ஊர் சுற்றிவிட்டு சரியாக சாப்பாட்டுக்கு வந்துவிடுவார்.
தற்கு மாறாக சின்ன சின்ன விஷயங்களில் அவர்களிடம் அன்பு காட்டிப்பாருங்கள், உனக்கு இந்த புடவை எத்தனை முறை கட்டினாலும் எடுப்பாதான் இருக்கு ஐஸ்வர்யா ராயெல்லாம் உன் அழகுக்கு முன்னாடி ஒன்னுமேயில்ல அப்படின்னு (பொய்தான்னு தெரியும், இருந்தாலும்) புகழ்ந்து ஒரு வார்த்தை சொல்லிப்பாருங்கள், அதென்னமோ தெரியலைடி 5ஸ்டார் ஹோட்டலுக்கு போய் காபி குடிச்சா கூட உன் கையால போட்ட காபிதான் காபி சே சான்ஸே இல்ல 5ஸ்டார் காப்பிலாம் இது பக்கத்துல வரவே முடியாது சூப்பர் (ஓவர்தான் ஆனாலும் பரவாயில்ல) அப்படின்னு சொல்லித்தான் பாருங்களேன். அது போல கணவன் அலுவலகம் போகும் போது வெளியே வந்து சின்னதாக புன்னகைத்து வழியனுப்பிப் பாருங்களேன். என்னங்க ஏன்? ஒருமாதிரியா இருக்கீங்க ரொம்ப வேலையா? தலைவலிக்குதா? நா காபி போட்டு தரவா? என கொஞ்சம் ஆதரவு குரலில் கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் கஷ்டப்படாமலே உங்கள் அன்பிற்கு உங்கள் துணையை அடிமையாக்கி விடலாம்.

ப்படியான சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியின் பாதையில் கூட்டிச்செல்லும், அதிலேயே நிரந்தரமாக இருக்கச் செய்யும்.

கையினால் கணவன் மனைவிக்கிடையே அன்பு செலுத்தி நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய துணையுடைய வாழ்க்கையையும் சந்தோஷமாக வைத்திருப்போம்

னி நம்முடைய வாழ்க்கை கசக்காது, திப்பாக இனிக்கும் என நம்புகிறேன்.

Monday, February 14, 2011

இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...(1402 2011)

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...

•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.

•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.


•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும்.

•முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.

•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.

நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.

•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.

காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.