இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, October 17, 2010

சண்டே ஸ்பெஷல் -கிட்னி பிரை (ஸ்மால் சிக்கன்) - Kidney Fry (17/10/2010)



தேவையான பொருட்கள்:-

ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி



செய்முறை :-

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி.



குறிப்பு:-

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்.

No comments:

Post a Comment