இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Friday, February 18, 2011

ஹாஸ்டல் காம்பவுண்ட் (1802 2011)

காலேஜ்ல பசங்கள சேர்க்கணும்னு முடிவு பண்ணுன உடனே பெத்தவங்க பையன் கிட்ட சொல்ற அடுத்த வார்த்தை ' நீ ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கணும். வெளிய தங்குனா கெட்ட பசங்களோட சேர்ந்து கெட்டு போயிடுவ. '

காத கொடுங்க சார் - 'நீங்க சொல்றது நூத்துக்கு நூறு தப்பு .. ஹாஸ்டல்லதான் எல்லா அயோக்யதனமும் நம்ம பையனுக்கு அறிமுகம் ஆகும் . எப்படின்னு கேக்கறீங்களா? வெளிய ரூம் எடுத்தான்னா கூட இருக்கறவன் சரி இல்லேன்னா வேற எடத்துக்கு போயிடலாம். ஆனா ஹாஸ்டல்ல அப்படி இல்ல.. இவன் ரூம்ல பசங்க ஒழுங்கா இருந்தாலும் , சுத்தி இருக்குற நூறு ரூம்ல வெந்தது, வேகாதது, அரைவேக்காடுனு நூறு விதமா பசங்க இருப்பாங்க. நல்லா என்ஜாய் பண்ண ,கெட்டு போக options அதிகம். ஒரு வருசத்துல்ல கேங் சேர்த்துட்டு அடுத்த வருஷம் அவனுகளே ஒரே ரூம்மேட்ஸ் ஆகிடுவாங்க.. புரிஞ்சிக்கோங்க '

(இந்த ரகசியத்த சொல்லி எத்தன பசங்க சாபத்துக்கு ஆளாக போறேனோ? சரி பரவாயில்ல...பெத்தவங்க ஆசிர்வாதம் என்னை காப்பாத்தும் )

ஹாஸ்டல்ல நடக்கற வேடிக்கை உலகத்துல வேற எங்கயும் பாக்க முடியாது.

ஒரு ரூம்ல ஒருத்தனுக்கு நைட்டுலதான் படிக்க மூடு வரும். இன்னொருத்தனுக்கு லைட் போட்டிருந்தா தூக்கம் வராது. ' டேய் .. லைட் ஆப் பண்ணுடா..லைட் ஆப் பண்ணுடா 'னு ரெண்டு நிமிசத்துக்கு ஒரு தடவ கத்தி , படிக்கற பையன அழுக வெச்சுடுவான். சரி காலைல , நேரத்துல எந்திரிச்சாவது படிப்போம்னு அலாரம் வெச்சா , இவன் தூங்குன உடனே அடுத்தவன் அலாரத்த ஆப் பண்ணிடுவான்.

காலைல நம்ம புத்திசாலி ஏன் அலாரம் அடிக்கலைன்னு கிளாக்க செக் பண்ணுனா நம்ம பையன் அப்பாவியட்ட முகத்த வெச்சுட்டு ' அது அடிச்சுது மாப்ள .. நீதான் ஆப் பண்ணிட்ட'னு சொல்லுவான். இந்த லூசு அத நம்பி நாளைக்கு எப்படியாவது எந்திரிச்சு படிச்சிடனும்னு முடிவு பண்ணுவான் . அடுத்த நாளும் இதேதான் நடக்கும் .
-------------------------------------------------------------------

அடுத்த தொல்லை - ஒரு ப்ளோருக்கு ஒரே போன்தான் இருக்கும் . யாராவது பையன் அவங்க அப்பா அம்மா கூட பேசிட்டு இருந்தா , அந்த பக்கமா போறவன் சும்மா போக மாட்டான் .. ' டேய் , தம்ம கீழ போடுடா.. வார்டன் வராரு ' னு போன்ல கேக்குற மாதிரி பத்த வெச்சுட்டு எடத்த காலி பண்ணிடுவான் .
ஏற்கனவே நம்ம பெத்தவங்களுக்கு பையன் மேல ரெம்ப நம்பிக்கை .. இதுல புதுசா இது வேற .

தப்பி தவறி எவனாவது ஒருத்தனுக்கு காலேஜ்ல பிகர் செட் ஆகிருக்கும். நம்ம ஆளுக்குதான் பெருமை ஜாஸ்தியே. லவ் சக்சஸ் ஆனதுக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு , அதே ஹாஸ்டல் ஒரு பத்து ரூபாய்க்கு சமோசா வாங்கி கொடுத்துட்டு பசங்கள ஒரு ரெண்டு மணி நேரம் அறுத்து எடுத்துருப்பான்.அத நம்ம பசங்க ஞாபகம் வெச்சுகிட்டு , அந்த பொண்ணு போன் பண்ணுனா கீழ இருந்து கத்துவானுக ' ரூம் நம்பர் 39 , சரவணனுக்கு போ.........ன்.. வாடா உன் மூணாவது ஆளு லைன்ல இருக்கு '..

இவன் வேகமா ரூம விட்டு ஓடி போறதுக்குள்ள அங்க ஒரு சின்ன கூட்டமே சேர்ந்துருக்கும்.. போனை கைல கொடுத்துட்டு 'பேசுடா மச்சி ..ஹிஹி'னு சொல்லி பக்கத்துலயே நிப்பானுக.. இவன் என்னத்த பேச முடியும் .. ? அந்த பக்கம் இருக்குற லூசுக்கு அது எதுவும் புரியாது .எதாவது பேசிட்டே போகும்.. இவன் போன வையின்னு சொல்ல முடியாம ஒரு மணி நேரமா 'அப்புறம் ..அப்புறம்..அப்ப்புறம்..'னு சொல்லிட்டே இருப்பான்.


சரி இந்த தொல்லைக்கு செல்போனயாவது வச்சிக்கலாம்னு பாத்தா , காலேஜ் ரூல் போட்டுருப்பாங்க -' நோ செல் போன் இன் காலேஜ் ப்ரிமிசஸ்' அப்படின்னு.

------------------------------------------------------------------------

அடுத்து எவனுக்காவது பர்த்டே வந்தா , அவன் அன்னைக்கு இருந்து 'இனி பர்த்டேவே கொண்டாடகூடாது'னு முடிவு பண்ற அளவுக்கு அவன நடுராத்திரி பன்னெண்டு மணிக்கு எழுப்பி , கேக்க முகம் பூரா அப்பி , முட்டை , தக்காளின்னு மிக்ஸ் பண்ணி அபிஷேகம் பண்ணி ,அவன குளிக்க வெச்சு ' அடுத்த நாள் கிளாசுக்கு வரும்போது ஏதோ ஆக்சிடெண்ட்ல அடி பட்டவன் மாதிரி இருப்பான். இத்தனையும் பண்ண நம்ம பசங்களுக்கு செலவு அதிகபட்சம் முப்பது ரூபாய்.

இத்தனையும் பண்ணிட்டு வருத்தமே படாம அப்புறமா அன்பா கேப்பாங்க . 'மச்சான் ட்ரீட் எங்கடா போலாம்'னு ..

----------------------------------------------------------------------------

எல்லா ஹாஸ்டல் உள்ளேயும் வார்டன்னு ஒரு காமெடி பீஸ் சுத்திட்டு இருக்கும். பர்ஸ்ட் இயர் பசங்க இவர மதிச்சு நடப்பாங்க . செகண்ட் இயர் வந்துடுச்சு .. இப்ப அந்த ஆள் எதாவது பேசினா அவளவுதான். சண்டை எல்லாம் போட மாட்டாங்க. 'போ.. போ.. பெரியவங்க பேசிட்டு இருக்கோம் .. நீ போயி டீ ரெடி ஆயச்சானு கவனி 'னு சொல்லிட்டு அவங்க அலப்பரைய கன்டினியு பண்ணுவாங்க. அதுக்கும் மேல எதாவது வேற எங்கயாவது கம்ப்ளைன்ட் பண்ணிடாருனு வைங்க .. அதுக்கப்புறம் இவங்க எதிர் நடவடிக்கை பயங்கரமான சதி நிகழ்வுகளா இருக்கும் .

அவர்கள் கடைபிடிக்கும் போர்கால உத்திகள் சில :
  • வார்டன் ரூம (அவர் தூங்கும்போது) பூட்டிறது.
  • அவர் கீழ நடந்து போய்ட்டு இருக்கும்போது மேல இருந்து ஒரு முழு பக்கெட் தண்ணிய கொட்டறது.
  • டைம் பாம் மாதிரி ஊதுபத்தியில பட்டாச கட்டி , அவர் இல்லாதப்போ ரூம்ல கொளுத்தி போடறது..
  • பர்ஸ்ட் இயர் பசங்ககிட்ட அவர் பேசிட்டு இருக்கும்போது , எங்கயாவது ஒளிஞ்சு நின்னுட்டு 'டேய் ..'னு அவர் பேர சொல்லி கத்தறது.
  • அவர் ரூம் ஜன்னல் வழியா உள்ள இருக்கிற பொருட்கள் எல்லாத்தையும் கீழ தள்ளி விடறது. முடிஞ்சா வெளிய எடுத்து நாலு பேருக்கு அன்பளிப்பா கொடுக்கறது..
இந்த மாதிரி அஹிம்சை வழிலதான் அவரை பழிவாங்குவாங்க. என்ன இருந்தாலும் அவர் வயசுல பெரியவர்.. அதனால கை எல்லாம் வைக்க மாட்டாங்க.

குறிப்பு : இது வார்டன் கூட இருக்கும் ஜால்ராக்கள் , அவரை சப்போர்ட் செய்யும் ஹாஸ்டலில் தாங்கும் வாத்தியார்களுக்கும் பொருத்தும்.

ஒரு காலேஜ் ஹாஸ்டல்ல வார்டன் வேலைய ரெண்டே ரெண்டு வருஷம் பாத்தா போதும் . வெளிய எந்த கஷ்டமான வேலையையும் பாத்துடுவீங்க. வடிவேல் பாணில சொல்லனும்னா ' நீங்க அடிச்சா அடி அப்படி ஒரு அடிடா. அந்த அடிக்கு அப்புறம் எவன் அடிச்சாலும் தாங்கற பலம் வந்துருச்சுடா...'

-------------------------------------------------------------------------------------------------

எதாவது புது படம் ரிலீஸ் ஆனாத்தான் வம்பே.. ஹாஸ்டல் பசங்கள கடுப்பேத்தரதுக்காகவே , day scholar பசங்க கேப்பாங்க ..'உங்களுக்கு என்னடா பிளான் .. ? நாங்க இன்னைக்கே நைட் ஷோ போறோம்' .. இது பத்தாதா.. ஒருத்தன் ஆரம்பிப்பான்


' கம்ப்யூட்டர் கிளாஸ் லேட் ஆகிடுச்சுன்னு சொல்லுவோம்டா '

'அறிவுடா உனக்கு.. எந்த கம்ப்யூட்டர் கிளாஸ் ராத்திரி ஒரு மணி வரைக்கும் இருக்கு ?'

'சரி விடு .. இந்த ரமேஷ் பையனுக்கு உடம்பு சரியில்ல .. டாக்டருக்கு கூட்டிட்டு போயிட்டு வரோம்னு சொன்னா ?'

'ஹ்ம்ம் .. பாப்போம் '
-----------------------------

'என்னங்கடா..நைட் ரெண்டு மணிக்கு வந்திருக்கீங்க. நீங்க சொல்ற கதைய நம்பவா என்னை இங்க வேலைக்கு வெச்சிருக்காங்க? நாளைக்கு எல்லாம் அவங்க அப்பா அம்மாவுக்கு போன் பண்ணி வர சொல்லுங்க '
'சார் .. அப்பா ஊருல இல்ல சார்.. '

'அம்மா?'

'அவங்க அப்பா இல்லாம எங்கயும் வரமாட்டாங்க சார் '
'போன் பண்ணுனேன் சார்.. ரிங் போய்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்டீங்கறாங்க ..'

'எங்க நம்பர் கொடு பாப்போம்..'

'இருங்க சார் ..மறுபடியும் ட்ரை பண்றேன்.'

'சார் ..இந்த ஒரு தடவ விட்டுருங்க சார் ..'

'ஏன்டா கெஞ்சற? எங்க அப்பா வரட்டும்டா.. நான் கூட இங்க நெறைய ப்ராப்ளம் இருக்குனு அப்பாகிட்ட சொல்லணும்.. உனக்குத்தான் தெரியுமே .. எங்கப்பா பிரின்சிபாலுக்கு தெரிஞ்சவர்னு..'


'சரி சரி இதான் லாஸ்ட் வார்னிங் .. கிளாசுக்கு போங்க '

அதுல்ல இன்னொரு கொடுமையான விஷயம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நடக்கும். ஏறக்குறைய எல்லா காலேஜ் மேனேஜ்மெண்டும் இந்த தப்பான கணக்க போடுறாங்க ; அது என்னன்னா , பொண்ணுக ஹாஸ்டலுக்கு மெஸ் பீஸ் எப்போவும் பசங்க ஹாஸ்டல விட ஆயிரம் ரூபா கம்மியா இருக்கும் - பசங்க மெஸ் பீஸ் பார்த்து டென்ஷன் ஆகிடுவாங்க.

ஏதோ பொண்ணுகளுக்கு சாப்பிடவே தெரியாத மாதிரியும் , பசங்க அதுக்குதான் காலேஜ் வந்துருக்கற மாதிரியும் அவங்க எண்ணம். உண்மை என்னனா பொண்ணுகளுக்கு காலேஜ்ல இருக்குற ஒரே பொழுதுபோக்கு சாப்பிடறதுதான் . பசங்க அங்க இங்கன்னு சுத்திட்டு எதோ ஹாஸ்டல் பக்கம் வரும்போது சாப்பிடுவாங்க. அதுவும் காலைல நம்ம பசங்க கரெக்டா கிளாஸ் ஆரம்பிக்க பத்து நிமிஷம் முன்னாடிதான் எந்திரிப்பாங்க . so ப்ரேக்பாஸ்ட் பெரும்பாலும் கட்.

ஆனா பொண்ணுக 'அதிகாலை விழித்தெழுந்து படிப்பதனால்' கரெக்டா சாப்பிட்டு கிளாசுக்கு வருவாங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு பெஞ்சுல நாலு பசங்க அசால்டா அம்சமா பிட் ஆவோம் . பொண்ணுக மூணு பேருக்கே பெஞ்ச பாகம் பிரிப்பாங்க . அப்போ யாருப்பா அதிகமா சாப்பிடறது ?

--------------------------------------------------------------------------------------

ஹாஸ்டல்டேனு வருஷம் ஒரு வெளங்காத நாள் வரும் .. நைட்தான் கச்சேரி களைகட்டும்.. இந்த நேரத்துலதான் பசங்க பகை எல்லாம் தீர்த்துக்குவாங்க.. எங்க இருந்தாவது ஒரே ஒரு குவார்டர் வாங்கிட்டு வந்து அத பதினாறு பேரு தீர்த்தம் மாதிரி அடிச்சுட்டு , பயங்கர போதைல இருக்கற மாதிரி எவன அடிக்கணுமோ அவன அடிக்கவோ இல்ல பஞ்ச் டயலாக் பேசவோ ஒரு நல்லா வாய்ப்பா பயன்படுத்திக்குவாங்க.. அடுத்த நாள் எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி நடந்தத மறந்துருவாங்க..

இத்தனை அடாவடி நடந்த பின்னாடி , காலேஜ் கடைசி நாள் எல்லாரும் பிரியும்போதுதான் ஒரு உண்மை புரியும் .. 'இந்த உருப்படாதவனுகள பாக்காம எப்படி இருக்க போறோம்'னு.. அப்போ கண்ண கட்டிட்டு வர கண்ணீர்தான் சின்ன வயசுல பொம்மை வாங்கி தரலேன்னு அழுததுக்கு அப்புறம் வர நிஜமான கண்ணீர் .
அதுக்கப்புறம் எப்போவும் அப்படி உண்மையா அழுகவும் மாட்டோம்...


செஞ்சது எல்லாம் தப்புன்னு நெறைய பேருகிட்ட மன்னிப்பு கேக்கத் தோணும் .. ஆனா இது வரைக்கும் கேட்டுருக்க மாட்டோம்..


இப்படி இவ்வளவு கலாட்டா நடந்த ஹாஸ்டல எப்படிங்க மறக்க முடியும் ? ஒரு தடவ டைம் இருந்தா போயிட்டு வாங்க.. தனியா
போகாதீங்க.. மறுபடியும் அழுவீங்க.. பசங்களோட போங்க..




No comments:

Post a Comment