இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, April 21, 2011

30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி? (2104 2011)




தவிர்க்க வேண்டிய உணவுகள்
========================

1) பால், தயிர் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

2) புளியைத் தவிர்க்க வேண்டும்.

3) உப்பைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கும்
குறைவான உப்பை பயன்படுத்தவும் .

4) எண்ணெய் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

5) தினம் ஒரு கொடம்புளி கீற்றினை குழம்பில் இட்டு அதைச்
சாப்பிட வேண்டும் .

6) இரவில் நான்கு துண்டுகள் பப்பாளி சாப்பிட வேண்டும் .

7) காலையிலும், மாலையிலும் கிரீன் டீ மட்டுமே குடிக்க வேண்டும் .

8) இனிப்பை தொடவே கூடாது .

9) காய்கறிகள் இரண்டு கப் என்றால் அரிசி சாதம் ஒரு கப் சாப்பிட வேண்டும் .

10) தேங்காயைத் தவிர்க்க வேண்டும்.

11) கிழங்கு வகைகள், பூமியின் அடியில் விளையும் காய்கறிகள் தவிர்க்க வேண்டும்.

12) மட்டன், சிக்கன் தவிர்க்க வேண்டும்.


சாப்பிட வேண்டிய உணவுகள்
==================

காலை (7.30 மணிக்கு)
==================

* கிரீன் டீ ஒரு கப் தினம் தோறும்.

* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு.

* இட்லி என்றால் மூன்று, தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி.

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* ஒரு கப் சாதம்(சுடுதண்ணீர் சேர்த்தது) அத்துடன் இரண்டு கப் காய்கறிகள்

>> மேற்கண்டவற்றில் ஏதாவதொரு உணவு காலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் .

* காலை பத்து மணியளவில் சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகளுடன் கொஞ்சம் தண்ணீர்.

மதியம் ( 12.45க்கு)
================
கீரை, ஒரு கப் சாதம், இரண்டு கப் வெந்த காய்கறிகள், பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு (வாரம் ஒரு தடவை மட்டும்), சாம்பார், குழம்புகள் இவற்றில் காரம் அதிகமிருக்க கூடாது . புளிக்குப் பதில் கொடம்புளி பயன்படுத்தவும் . கிழங்கு வகை காய்கறிகளைத் தொடவே வேண்டாம் . நாட்டுக் காய்கறிகளுடன் பருப்பு வகைகள் சேர்த்துக் கொண்டால் நல்லது.

மாலை (4.00க்கு)
================
* ஒரு கப் கிரீன் டீயுடன், சில மேரி (அ) எதாவது பிஸ்கட்டுகள்.

இரவு(7.30க்கு)
===========
* தோசை என்றால் மூன்று தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு

* சப்பாத்தி என்றால் இரண்டு அதனுடன் காய்கறிக் குருமா(தேங்காய், எண்ணெய் சேர்க்காமல் செய்தது)

* அத்துடன் மதியம் மீதமான காய்கறிகள் கொஞ்சம்

படுக்கும் முன்பு
==============
* ஐந்தோ அல்லது ஆறோ துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளி.

* இரண்டு லிட்டர் தண்ணீரை பருக வேண்டும் .

மேற்கண்ட உணவினைச் சாப்பிட்டு வாருங்கள் . பின்பு ஒரு மாதம் எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுங்கள் . அடுத்த மாதம் எண்ணெய் சேர்த்துச் சாப்பிடுங்கள் . மட்டன், மீன், சிக்கன் மாதமொருமுறைச் சேர்த்துக் கொள்ளுங்கள் . அவ்வளவுதான் உடல் எடை குறைந்து, உடல் லேசானது போல ஆகிவிடும் .

*முக்கியமாக கவனிக்க வேண்டியது: நேரம் தவறாமல் சாப்பிட

வேண்டும். அதுமட்டுமின்றி இரவு பத்து மணிக்கு உறங்க சென்று
விட வேண்டும்.



என் குறிப்பு : * மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய டடீசியன்களின்
பரிந்துரைகளை தொடரும்படி வேண்டுகிறேன்.

* இது எனக்கு மெயிலில் வந்த தகவல் .


No comments:

Post a Comment