இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, October 25, 2011

சொல்லிவிட வேண்டும்! (2510 2011)


முன்பெல்லாம் எழுதவே தோன்றாது;
நிறைய கவிதை வரும்!
இப்போது நிறையக் கவிதை வருகிறது;
எழுதத்தான் முடியவில்லை
இதுவரை என் தட்டில் உணவு மட்டுமே
பரிமாறப் பட்டிருக்கிறது.
அதில் உணர்வையும் பரிமாறியவள்
இவள் மட்டும்தான்!
காதல் என்ற பருவக்காற்று இப்போது
என் திசையில் வீசப் பார்க்கிறதா?
இல்லை, வீசிக்கொண்டிருக்கிறதா?
இந்த அனுபவம் எனக்கொன்றும்
புத்தம் புதியதில்லை!
நானும் சில பெண்மையின்
பிரம்மாண்டங்களில்
தூரத்து ரசிகனாய்த் துடித்தவன்தான்.
பிரபஞ்சத்தின் ரகசியத்தைப்
பெண்மையில் கண்டறிய நினைத்தவன்தான்.
ஆனால்-எந்தப் பெண்ணும் எனக்குள்
பௌதிக மாற்றங்களை நிகழ்த்தியதில்லை.
சில பெண்கள் என்னையும்,
சில பெண்களை நானும்
கடந்து போனதுண்டு.
அப்போதெல்லாம் கிளி உட்கார்ந்து போன
கிளையாய்...
என் இலைகள் ஆடியதுண்டே தவிர,
என் வேர்கள் ஆடியதில்லை.
என் ஆணி வேரில் அபாயச்சங்கு ஒலித்தது
இவள் வந்தபிறகுதான்.
சொல்லிவிட வேண்டும்!

Thursday, October 20, 2011

மீண்டும் உன்னை சந்திக்காமலா போய்விடுவேன்? (2010 2011)


உனக்கென்ன...! பெயர் மட்டும் சொல்லி விட்டு
முகவரி சொல்லாமல் போய்விட்டாய்.
ஆனால் மழை நின்ற பிறகும் மலர்கள் நடுங்குவதுபோல்
எனக்குள்... ஏன் இத்தனை அதிர்வுகள்?
உன்னோடு நேர்ந்த அனுபவத்துக்கு
என்னோடு என்ன அடையாளமிருக்கிறது?
என்ன ஆனது எனக்குள்
ஒரே நாள் மழையில் ஏரி நிறைவது மாதிரி
உன் ஒரே பார்வையில் என்
வெறுமை நிறைந்து விட்டதே!
என் ஜன்னல்களை பெண்கள் உரசிப்போனதுண்டு
மேகங்கள் மாதிரி – ஆனால்
உரசிப்போன வேகத்தில் உட்கார்ந்து
மழை பெய்தவள் நீதானடி!
உன் நினைவுகளை அங்குலம் அங்குலமாக
அசைபோட்டுக் கொண்டேயிருகிறேன்.
உன் கருத்துக்களை என்னால் ஏற்க முடியாது
ஆனால் உன் கண்களை என்னால் மறக்க முடியாது.
உன்னை மீண்டும் சந்திக்காமலா போய்விடுவேன்?
வானத்தில் எறியப்பட்ட கல்
விண்ணுக்கு வெளியே சென்று விழுந்துவிட முடியமா?
சந்திப்பேன் நிச்சயம் சந்திப்பேன்.

- வைரமுத்து.

Saturday, October 15, 2011

இயல்பு...! (1510 2011)


"நீயின்றி நானில்லை"
- தத்துவங்கள்
"நீ செத்துட்டா நானும் செத்துடுவேன்"
- பிதற்றல்கள்
"அடுத்த ஜென்மத்திலும் பிரிவில்லை"
- சத்தியங்கள்

எல்லாம் மறந்து போகின்றன !
புதிதாய் மற்றொரு உறவு !


* * * * * * *

மீளா இறப்புகள்
மீளா துயரங்கள்
ஆற்றமுடியாப் பிரிவுகள்
சோகங்கள்
வேதனைகள்
இழப்புகள்

எல்லாம் மறக்கடிக்கபட்டு
விடுகின்றன...

சில நாட்களில்...
சில வாரங்களில்...
சில மாதங்களில்...

யதார்த்த உலகில்
வாழ்க்கை
வெகு இயல்பாகிவிடுகிறது !!

புறம் பேசுதல் ... (1510 2011)


ரகசியங்கள்
நிரம்பி வழிகிற

வாழ்வின் பயணங்களில்
எதிர்ப் படும்
உங்களிடம் இருக்கும் கதைகள்
என்
திசைகளை மாற்றிவிடுகிறது..

எல்லாக் கதைகளிலும்
உண்மை
இருப்பதில்லை
உண்மையாகவும்
இருப்பதில்லை
எனினும்
அவைகள்
என் மனக்கூட்டில்
திரையிடுகிற
சோகங்களை
சுமக்க முடியவில்லை..

எதிர்பார்க்காவிட்டாலும்
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன
சில பொழுது போக்கு
சில வம்பு
சில கள்ளக் காதல் என
விரும்பப்படுகின்ற கதைகள்
மட்டுமே
சுவாரஸ்யம் கூட்டுகின்றன..

அவன், இவன்
நீ, நான்
எவனுமே சரியில்லை
டீக்கடை
சாக்கடை..

சினிமாவோ
அரசியலோ
பக்கத்து வீட்டுக்காரனோ, காரியோ
கிசுகிசுக்கள்
புனிதமானவை..

யார் கதைகளையோ
நாம் பேச,
நம் கதைகளை
யாரோ பேச
பேசப் பேச
பொய்கள்
உண்மையாகிவிட
சிலர்
விலகவோ
நெருங்கவோ
கதைகளே காரனம்..

கவனமாக இருங்கள்
இன்று உங்களை பாராட்டும்
அதே ஆள்தான்
நாளை உங்களை
தூற்றக்கூடும்
நேற்றைய நண்பர்கள்தான்
நம் இன்றைய எதிரிகள்..

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது (1510 2011)

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்

பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.


தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை ) (1510 2011)



தியாகம் என்ற வார்த்தைக்கு
அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை
மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம்.

சில நேரம் நான் குறும்பு செய்யும்போது
ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு
தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன்.

நான் பார்க்கும் பழகும் உலகம் என்னால்
நீ அதிஷ்டம் என்பார்கள் ஆனால்
நான் தான் பாக்யசாலி.

உன் தியாகத்திற்கு கைமாறு செய்ய நினைத்து
என் அஸ்தியை உன் பாதம் படும் புற்களுக்கு
உரமாக போட்டாலும் ஈடாகாது தாயே.