இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Wednesday, September 22, 2010

கடவுள் என் மட்டில் (22/09/2010)

"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?



"மனிதன் தான் கடவுளை படைத்தான்" இது என் கருத்து தான், அதனால் தான் மனிதனை போலவே கடவுளும் இருக்கிறார்

பாருங்க எல்லா ஆங்கில்லையும் போட்டோ எடுத்துக்க என்று நடராஜர் தான் காலை தூக்கிட்டு நின்றிருப்பாரா இல்லை சரஸ்வதி குளோசப் போட்டோ சரியாய் விழலன்னு இன்னொரு டேக் போயிருப்பாங்களோ,சாத்தியமே இல்லையே

மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்

அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்

"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்

நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?

முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்

ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!


நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று

அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்தார் கடவுள்..

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே....

No comments:

Post a Comment