இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, September 26, 2010

சண்டே ஸ்பெஷல்-சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ் (26/09/2010)



தேவையானவை :-
  • பாசுமதி அரிசி - 500 கிராம்
  • சுத்தம் செய்த இறால் - 300 கிராம்
  • புரோசின் பீஸ் (green peas) - 100 கிராம்
  • முட்டை - 2
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • பூண்டு - 3 பற்கள்
  • அஜினோமோட்டோ - 1/2 தேக்கரண்டியிலும் குறைந்தளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
  • கிராம்பு - 4
  • கறுவா - 2
  • ஏலக்காய் - 4
செய்முறை :-
மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை கழுவி அதனுடன் ஏலக்காய், கறுவா, கிராம்பு, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், கால் தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து விரும்பினால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது மாஜரினும் சேர்த்து 700 மி.லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அப்போது தான் சாதம் உதிர் பதமாக இருக்கும்.

இறாலை சிறுத் துண்டுகளாக நறுக்கி கால் தேக்கரண்டி உப்பு மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் தூளும் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து அடித்து அப்பமாகப் பொரித்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டை தட்டிப் போட்டு பிரட்டி வைத்திருக்கும் இறாலையும் போட்டு நன்கு வதக்கவும்.

இறால் நன்கு வதங்கியதும் அதனுடன் பீஸை போட்டு வதக்கவும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை, மீதமுள்ள உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ போட்டு பிரட்டி விடவும். அஜினோமோட்டோ சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும் சிறிதளவேனும் அதிகமானாலும் புளிப்பு தன்மை அதிகமாகிவிடும்.

இந்த கலவையில் வேக வைத்து ஆற வைத்த சாதத்தையும், துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் நன்கு பிரட்டி விட்டு சூடாகியதும் இறக்கவும். சமைத்து முடியும் வரை குறைந்த தீயிலேயே வைத்திருக்கவும்.

சுவையான சைனீஸ் ப்ரைட் ரைஸ் ரெடி. இதனை மட்டன் அல்லது சிக்கன் பிரட்டல், அவித்த முட்டை சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment