தேவையானவை :-
- வஞ்சர மீன் - 1 கிலோ(முள் இல்லாத எந்த மீனும் போடலாம்)
- பாஸ்மதி அரிசி - 2 கப்
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- நெய் - 2 தேக்கரண்டி
- பட்டை - 2
- லவங்கம் - 4
- ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
- பிரிஞ்சி இலை - 1
- சோம்பு - 1 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/2 கப்
- இஞ்சி,பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
- தக்காளி - 3
- கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு
- புதினா - சிறிது
- பச்சை மிளகாய் - 5
- கறிமசாலா - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் விழுது - 1/2 கப்
- உப்பு - தேவைக்கேற்ப
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :-
- மீனில் லேசாக உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், லெமன் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் குக்கரில் எண்ணெய், வெண்ணெய், நெய் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய் பொடி, பிரிஞ்சி இலை, சோம்பு சேர்க்கவும். வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
- அதனுடன் கறிமசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வேண்டுமெனில் சிறிது நெய் விட்டு வதக்கவும்.
- பிறகு தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும்.
- கடைசியில் ஊற வைத்த மீனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு அரிசியை சேர்த்து லேசாக வதக்கவும்.
- பின் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- பின் 15 நிமிடம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறிய பின் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment