இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, August 24, 2010

இன்று இந்த ஆண்டின் மிக்ச சிறிய பெளர்ணமி! (24/08/2010)


இந்த ஆண்டின் மிகச் சிறிய பௌர்ணமி நிலவை இன்றிரவு காணலாம். இது பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படும்.

இந்த தகவலை ‘ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் [^] சி.பி. தேவ்கன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தான் மிகப் பெரிய நிலவு அதிக பிரகாசத்துடன் தோன்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பெரிய நிலவை விட இன்று தோன்றும் நிலவு 15 சதவிகிதம் சிறியதாகவும் 30 சதவிகிதம் ஒளி அடர்த்தி குறைவானதாகவும் தோன்றும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் தோன்றும் இந்த பௌர்ணமி நிலவு, தானிய நிலவு என்று அழைக்கப்படுகிறது. இது இரவு 12.05 மணி அளவில் நன்றாகத் தெரியும்.

நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள். ஆனால் இன்று தோன்றும் நிலவு 2 லட்சத்து 52 ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருப்பதால் பார்ப்பதற்கு சிறியதாகத் தோன்றும்.

வரும் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 -ம் தேதி இதே போன்ற மிகச் சிறிய பௌர்ணமி நிலவைக் காணலாம்.

No comments:

Post a Comment