டாக்டர் தேவி ஷெட்டி, நாராயண ஹிருதயலயா (இதய சிறப்பு மருத்துவர்), பெங்களூரு, அளித்த கேள்வி பதில்கள். இங்கே உங்களின் பார்வைக்காக....
இதயத்தை காக்க ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் எவை?
1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்
2. உடற்பயிற்சி - அரை மணி நேர நடை, குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிருங்கள்.
3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.
4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.
அசைவ உணவு குறிப்பாக மீன் இதயத்திற்கு நல்லதா?
இல்லை.
நல்ல உடல் நலமுள்ளவர்களுக்கும் இதய நிறுத்தம் ஏற்படுகிறதே? இதை எப்படி அறிந்து கொள்வது?
இதைதான் சைலென்ட் அட்டாக் என்று சொல்கிறோம். எனவேதான் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வலியுருத்துகிறோம்.
இதய நோய் மரபு வழி வரக்கூடியதா?
ஆம்
இதய அழுத்தத்தை தவிர்க்க சில வழிகள்?
உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளுங்கள். உங்களின் வாழ்கையில் ஒவ்வொரு விசயத்திலும் நிறைவை (Perfection) எதிர்பார்ப்பதை தவிருங்கள்!
இதயத்தை காக்க ஓட்ட பயிற்சியை விட நடை பயிற்சி சிறந்ததா?
நடை பயிற்சியே, ஓட்ட பயிற்சியை விட சிறந்தது. ஓட்ட பயிற்சியின் பொது விரைவிலேயே சோர்வு வந்துவிடும் மேலும் மூட்டில் (Joints) பிரச்சனை ஏற்படலாம்.
குறைந்த இரத்த அழுத்தமுள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாயிப்புள்ளதா?
மிகவும் அரிதாக.
கொழுப்பு நமது உடலில் எந்த வயதிலிருந்து சேருகிறது?
குழந்தை பருவத்திலிருந்தே!
முறையற்ற உணவு பழக்கம் எப்படி இதயத்தை பாதிக்கிறது?
நீங்கள் எடுத்துக்கொள்ளும் முறையற்ற துரித உணவு வகைகள் உங்கள் உடலின் செரிமான வினைவூக்கியை குழப்புகிறது.
கொழுப்பை மாத்திரை இல்லாமல் எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது?
உணவுக் கட்டுப்பாடு, நடை பயிற்சி மற்றும் வால்நட்டை(ஜாதிக்காய்) (walnut) சாப்பிடுங்கள்.
யோகா உதவுமா?
ஆம்.
இதயத்திற்கு சிறந்த மற்றும் மோசமான உணவு என்ன?
பழங்கள் மற்றும் காய்கறிகள் சிறந்தது. எண்ணெய் மோசமானது.
எந்த எண்ணெய் சிறந்தது? கடலை எண்ணெய், சன்பிளவர் அல்லது ஆலிவ்?
எல்லா எண்ணெய்களுமே மோசமானது.
இதயத்தை காக்க எதுவும் குறிப்பிட்டு சொல்லும் படியான முறையான செக்கப்?
இரத்த சோதனை- சர்க்கரையின் அளவை அறிய, இரத்த அழுத்த சோதனை, கொழுப்பு சோதனை., Treadmill test after an echo(மொழி பெயர்க்க முடியல)
மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி என்ன?
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும். பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.
மாரடைப்பால் ஏற்படும் வலியையும், வாயுத் தொல்லையால் ஏற்படும் வலியையும் எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்?
மிகவும் அரிது, ஈ.சீ.ஜீ (ECG) சோதனை இல்லாமல்.
இளம் வயதிலேயே இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட முக்கிய காரணம் என்ன? தற்போது 30-40 வயது உடையவர்கள் கூட மாரடைப்பினாலும், கடுமையான இதய நோய்களினாலும் பாதிப்படைகிறார்களே?.
அதிகமான விழிப்புணர்வு அதிகமான நிகழ்வுகளை ஏற்படுத்திவிட்டது. முறையற்ற மற்றும் அதிக உடலுழைப்பு இல்லாத, உட்கார்ந்தே இருக்கக் கூடிய வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், துரித உணவுகள் (Junk Food), குறைவான உடற்பயிற்சி இருக்கும் நாடுகளில் மாரடைப்பு ஏற்படுவது மரபணு ரீதியாக மும்மடங்கு அதிகமாக இருக்கிறது, இது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை விட அதிகம்.
ஒரு மனிதனின் சாதாரண இரத்த அழுத்த அளவான 120/80, என்பதற்கும் அதிகமாக இருந்தாலும் கூட ஆரோக்கியமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பு இருக்கிறது..
நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமா?
கண்டிப்பாக அதிகம் வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் பிறவி குறைபாடும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.
எங்களில் பெரும்பாலோர் இரவு அதிக நேரம் அலுவலகத்தில் வேலை செய்ய நேரிடுகிறது. இதனால் இதய பாதிப்பு ஏற்படுமா? என்ன முன்னேற்பாடுகள் இதற்க்கு எடுத்துக் கொள்ளலாம்?
இளம் வயதில் இயற்கையிலேயே நமது உடல் இது போன்ற முறையற்ற வாழ்க்கை முறையை எதிர்த்து காக்கிறது. எனினும் வயது ஆக ஆக முறையான வாழ்க்கை முறைக்கு வந்து விடுவது அவசியம்.
இரத்த அழுத்தத்தை கட்டு படுத்துவதற்கு எடுத்து கொள்ளும் மாத்திரைகளினால் (anti-hypertensive) ஏதேனும் குறுகிய/நீண்ட கால பக்க விளைவுகள் ஏற்படுமா?
ஆம். பெரும்பாலான மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இருந்தாலும் இந்த நவீன காலத்தில் வரும் மாத்திரைகள் மிகவும் பாதுகாப்பானதே!
அதிகமாக காபி, டீ அருந்துவதால் பாதிப்பா?
இல்லை.
ஆஸ்த்மா நோயாளிகளுக்கு இதே நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமா?
இல்லை.
துரித (குப்பை) உணவுகள் (Junk Food) என்று எவற்றைக் குறிப்பிடலாம்?
வறுக்கப் பட்ட உணவுகள், சமோசா மற்றும் மசாலா தோசை
(Fried food like Kentucky, McDonalds, samosas, and even masala dosas)
ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களை விட இந்தியர்களுக்கு இதய நோய் ஏற்பட மும்மடங்கு வாய்ப்புக்கள் அதிகம் ஏன்? அவர்களும் நிறைய துரித (Junk) உணவுகள் சாப்பிடுகிறார்களே?
ஒவ்வொரு இனமும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு இலக்காகிவிடுகிறது, துரர்த்திஷ்ட வசமாக இந்தியர்கள் இது போன்ற கடுமையான நோய்களுக்கு இலக்காகி விடுகிறார்கள்.
வாழைப்பழம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுமா?
இல்லை.
மாரடைப்பின் போது ஒருவர் தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா? ஏனெனில் இது சம்பந்தமான ஈ-மெயில்களை அடிக்கடி படிக்க நேர்கிறது.
கண்டிப்பாக முடியும். வசதியாக படுத்துக் கொண்டு நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை வைத்துக்கொள்ளவும். உடனே அருகிலுள்ள இதய சிறப்பு மருத்துவரிடம் தாமதிக்காமல் கூட்டி செல்ல கேட்டுக் கொள்ளவும். கண்டிப்பாக ஆம்புலன்ஸ்க்காக காத்திராமல் சென்று விடவும், பெரும்பாலான நேரங்களில் ஆம்புலன்ஸ் உதவுவதில்லை .
இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மற்றும் ஹீமோக்ளோபின் குறையும் போது மாரடைப்பு ஏற்படுமா?
இல்லை. இருந்தபோதிலும் நல்ல உடல் நலத்திற்கு இதன் அளவுகள் சரியாக இருப்பது நல்லது/ அவசியம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் சில நேரம் உடற் பயிற்சி செய்யாத போது, வீட்டிலும், அலுவலகத்திலும் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்கள் உடற் பயிற்சிக்கு மாற்றாக அமையுமா?
கண்டிப்பாக. அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஒரே இருக்கையில் அமர்வதை தவிர்க்கவும். ஒரு இருக்கையில் இருந்து அடுத்த இருக்கைக்கு சென்று அமர்ந்து பழக்கப்படுத்தி கொள்வது கூட சிறிது உதவும்.
இதய நோய்க்கும், இரத்தத்திலுள்ள சர்க்கரைக்கும் தொடர்புள்ளதா?
ஆம். நெருங்கிய தொடர்பு உள்ளது. சர்க்கரை நோய் இல்லாதவர்களை(non-diabetics) விட அது உள்ளவர்களுக்கு(diabetics) மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.
இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
1) முறையான உணவு (Diet), உடற் பயிற்சி, சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது.
2) கொழுப்பு (cholesterol), இரத்த அழுத்தம், எடை - இவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது.
பகலில் பணி புரிபவர்களை விட இரவில் பணி புரிபவர்கள் மாரடைப்பால் அதிகம் பாதிக்க படுவார்களா?
இல்லை.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நவீன சிறந்த மாத்திரை என்ன?
நூற்றுக்கணக்கான மருந்து மாத்திரைகள் சந்தையில் உள்ளன. உங்கள் உடலுக்கும் பிரச்சனைக்கும் தகுந்ததை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். என்னுடைய அறிவுரை என்னவெனில் மருந்து மாத்திரைகளை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு இயற்க்கை வழிக்கு செல்லவும், அதாவது நடை பயிற்சியின் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது, முறையான உணவு மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது.
டிஸ்பிரின் (Dispirin) மற்றும் இது மாதிரியான தலை வலி மாத்திரைகள் மாரடைப்பு வாய்ப்பை அதிகப்படுத்துமா?
இல்லை.
மாரடைப்பு வாய்ப்பு ஏன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமா உள்ளது?
இயற்கையே 45 வயது வரை பெண்களைக் காக்கிறது.
ஒருவர் எவ்வாறு தம் இதயத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்வது?
ஆரோக்கியமான நல்ல உணவு பழக்கம், துரித உணவு (Junk Food) வகைகளை தவிர்ப்பது, தினமும் உடற்பயிற்சி, புகை பிடிப்பதை தவிர்ப்பது, மேலும் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது, நீங்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால். (6 மாதத்திற்கு ஒரு முறை பரிந்துரைக்கப்படுகிறது).
No comments:
Post a Comment