சமீபத்தில் ஒரு வாராந்திர புத்தகத்தில் படித்தேன் . மனஅழுத்தம் (STRESS)  என்பது நமது சகிப்புத்தன்மையையும் தாண்டி மன உளைச்சலை தரக்கூடிய ஒரு கொடிய  நோய் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது மீண்டும் மீண்டும் நாம் மன  அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் பொழுது நமது உடல் ஆரோக்கியத்தின் தன்மை  குறைக்கப்படுகின்றதாம்.
மனமும் , உணவும் நன்றாக அமைந்துவிட்டால்  மனிதன் மிகவும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்துவிடுகிறான். இதில் எவ்வளவு தூரம்  உண்மை இருக்கிறது பாருங்கள்.
அந்த  காலகட்டங்களில் உணவு பழக்கவழக்கங்கள் சிறப்பாக    இருந்தது . இயற்கை   உரங்கள்  பயன்படுத்தப்பட்டு   உணவு தானியங்கள் தயாரிக்கப்பட்டன அல்லது  விளைவிக்கப்பட்டன.
அன்றைய வேலைகள் கடினமாக இருந்தாலும் , இப்பொழுது இருக்கக்கூடிய வேலைகளைப் போல் மனஅழுத்தம் தரக்கூடியதாக இல்லை.
நான்  எதைக் குறிப்பிட்டு சொல்லுகின்றேன் என்று உங்களுக்கு புரிகிறதா? ஆம் ,  கணினி மென்பொருளாளர்கள். நான் இவர்களைமட்டும் சொல்லவில்லை . இன்றைய  காலகட்டத்தில்
வேலை பலு,
தொழில்முறைப் போட்டி(Business),
அடுத்தவர்களின் உயர்வு நமக்கு அளிக்கக்கூடிய பயம்,
பிறரைபோல் வாழமுடியவில்லையே என்ற ஏமாற்றம்,
சரியான வசதியின்மை(வறுமை) ,
தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது   
சிறிய விஷயத்தை பெரிதாக்கி கவலைபடுதல்  -----   இதுபோன்ற காரணங்களே மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
அதுவும்  கணினித்துறையில் இருப்பவர்களை மிகவும் கவனிப்புடன் இருக்கசொல்கிறார்கள்.  இவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகும்பொழுது அதை திசைதிருப்பும் வழியும்  தெரிவதில்லை என்றே சொல்கிறார்கள். காரணம் அவர்களது கவனம். உதாரணமாக ஒருவர்  இரண்டுமணி நேரம் கணினியில் அமர்ந்து முக்கியமான ஒரு வேலையை அவரது பாஸ்  சொல்லிய காலகெடுவுக்குள் முடிக்க நினைக்கிறார் . ஆனால் எதோ சின்ன பிரச்சனை.  அந்த தருணம்தான் அவருக்கு மனஅழுத்தம் ஏற்படுகின்ற உணர்வும் இருப்பதில்லை,  அப்படியே உணர்ந்தாலும் மறுபடியும் அந்த வேலையை முடிக்கவேண்டுமே என்ற    எண்ணம்தான்   ஓடுமே தவிர அவரால் தன் மனஅழுத்தத்தை குறைக்கும் காரணியை அவர்  நாடுவதில்லை.
சமீபத்தில்கூட ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது. அது  உங்களுக்கும் மின்னஞ்சலில் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை IIT  மாணவன் ஒரு மிகப்பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல பணியில் சேர்ந்து  இரண்டே வருடத்தில் அவனது கம்பெனி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை  செய்துகொண்டான்.காரணம் மனஅழுத்தம். அதையும் தன் மரணகடித்தத்தில்  குறிப்பிட்டு இறந்துபோயிருக்கிறான்.
நமது முன்னோர்கள் காலத்திலும்  மனஅழுத்தம் இருந்தது. சில நோய்களும் இருந்து இறந்திருக்கிறார்கள்.ஆனால்  இன்று இருக்கும் நிலைமையை பார்த்தீர்களா? . தொட்டதுக்கெல்லாம் ஒரு  வியாதிபெயரை சொல்கிறார்கள்.காரணம் மக்களிடையே மாறிய பழக்கவழக்கங்களும் ,  உணவு முறைகளும்.
முப்பது வயதில் சர்க்கரை நோய்,  சிறுகுழந்தைகளுக்கும் அதே நோய், முப்பத்திநான்கு வயதில் ஹார்ட் அட்டாக் .  என்னவாயிற்று? நாம் மாற நம் மரண தேதிகளும் மாறி நம்மை நெருங்கி வர  ஆரம்பித்தது. முன்னெல்லாம் சொன்னார்கள் என்பது வயதுவரை வாழ்ந்துவிட்டு  இறக்கலாம் என்று. இப்போது சொல்கிறோம் சும்மா ஒரு நாற்ப்பது, நாற்பத்தஞ்சு  வயசு வரைக்கும் வாழ்ந்தா பத்தாது? என்று.
சரி , நான் சொல்ல வந்ததை  சொல்லிவிடுகிறேன். உங்களுக்கு கோபம் வரும்போழுதோ , அல்லது மனஅழுத்தம்  ஏற்படும்பொழுதோ இங்கே கீழே கொடுக்கப் பட்டுள்ள செயல்களை கொஞ்சம் செய்து  பழகுங்கள். உங்களைவிட்டு இந்த Stress தானாக ஓடிவிடும்.
1] உங்களுக்கு பிடித்தமான பொருளின்மீது ஒரு இரண்டு நிமிடம் கவனத்தை திருப்புங்கள்.
2] இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து கொஞ்சதூரம் நடந்துவிட்டு வாருங்கள்.
3] போனை எடுத்து உங்கள் நண்பருக்கு பேசுங்கள்.முடிந்தவரை அரட்டை அடியுங்கள்.
4] தம்பதிகள்  தனியாக இருந்தால் அவர்கள் செக்ஸ்-இல் ஈடுபடலாம். மன அழுத்தத்தை போக்க  மிகச் சிறந்த வழி செக்ஸ் . இது தம்பதிகளுக்கு  மட்டும்.
5] உங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஓட விட்டு கண்களை மூடி வரிகளை கேளுங்கள்.
6] முடிந்தவரை இந்த நெகடிவ்வாக பேசும் ஆட்களை உங்கள் அருகில் சேர்க்காதீர்கள்.
7] தைரியமாக உங்களால் முடியாத வேலைகளை என்னால் செய்ய முடியாது என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள்.
8] பிடித்தமான பழச்சாறுகளை அருந்துங்கள், பிடித்தமான உணவு ஏதேனும் எடுத்துக்கொள்ளுங்கள்.
9]  ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் அதைபோட்டு குழப்பிக்கொள்ளாமல் அடுத்து  என்ன என்பதிலும், எப்படி அதை சமாளிக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்துங்கள் .
10] சரியான உணவு பழக்கம் , அதாவது சரியான நேரத்துக்கு சாப்பிடுவது, சரியான தூக்கம் என்று வரையறைத்துக் கொள்ளுங்கள்.
11]  தேவையில்லாத விஷயங்களில் தலையை நுழைத்துக்கொண்டு அவதிபடாதீர்கள். உங்களுக்கான வேலைகளை நேரம் பிரித்து செய்து முடியுங்கள் .
12]  ஒரு தவறு செய்துவிட்டால் அதை நினைத்து நீங்களே உங்களைப் பார்த்து  சிரித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்தவர் உங்களை கேலி பேசும்போது  உங்களுக்கு கோபம் வராது .
13] குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் விளையாடுங்கள். 
14] இளஞ்சூடான நீரில் உங்கள் பாதங்களை கொஞ்சநேரம் வைத்திருங்கள்.
15]  சிகரெட் , மது இவற்றை நாடாதீர்கள். இவை இரண்டும் உங்களின் கோபத்திற்கோ  கவலைக்கோ மருந்தே கிடையாது. நிங்கள் மனஅழுத்தம் ஏற்படும்போது  புகைபிடித்தால் டென்ஷன் குறைவதாக நினைப்பவரா ?
இதோ உங்களுக்கான பாடம் :   அடுத்தமுறை நீங்கள் டென்ஷன் ஆகமாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்.  அப்பொழுதும் உங்களுக்கு சிகரெட் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு  தள்ளபடுவீர்கள். இப்படித்தான் புகைப் பிடிப்போர் அனைவரும் அதற்க்கு  அடிமையாகிறார்கள்.   இப்படி டென்ஷன் -ஐ குறைக்க உங்கள் ஆயுளை  குறைத்துக்கொள்ளதீர்கள்
இனிப்பான வாழ்க்கையை இன்றே தொடங்குங்கள்.
உங்கள் வாழக்கை உங்கள் கையில்...
No Tension ........... Be Relax 
 
No comments:
Post a Comment