இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, August 22, 2010

சிங்கப்பூர் நடத்தும் பருவ வயதினருக்கான ஒலிம்பிக்!

சிங்கப்பூரில் முதன் முறையாக பருவ வயதினருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் (Youth Olympic Games) நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 14 - 26 வரை நடைபெறும் இப்போட்டிகளில், 204 நாடுகளை சேர்ந்த 5,000 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
14-18 வயதினருக்கான 26 விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 20,000 பேர் ஒழுங்கமைப்புக்குழுவில சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் சிறிய நாடென்பதால் இப்போட்டிகளை மிகுந்த சிரத்தையுடன் நடத்தவே இந்த ஏற்பாடாம்.

முதன் முறையாக பருவ வயதினர் பங்கு பெறும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் என்பதால், உலகளாவிய ரீதியில் பருவ வயதினரை ஊக்குவிக்கவும், அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர்களை தயார் செய்யவும் இப்போட்டிகளை நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்திருக்கிறது.

7000 இளைஞர்கள் பங்கு பற்றிய தொடக்க விழாவினை, சிங்கப்பூர் குடியரசு தலைவர் எஸ்.ஆர். நாதன் ஆரம்பித்து வைத்தார்.

ஆசியாவின் ஒரு சிறிய நாட்டில், மிகபிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவினை உலக வல்லரசுக்களுக்கும் அதிசயித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment