இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Tuesday, August 31, 2010

ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (31/08/2010)

முத்ரா என்ற வடமொழிச் சொல்லிற்கு ‘குறியீட்டு வெளிப்பாடு’ என்று பொருள் கூறலாம். தமிழில் ‘முத்திரை’ என்று கூறுவர். பழங்கால இந்தியாவில் இக்குறியீடுகள் சிற்பங்கள் மூலமாகவும், நாட்டியத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் வெளியிட முடியாத உணர்வுகள் கூட முத்திரைகள் மூலம் வெளிப்பட்டன.

சொலவடை ஒன்றைக் கேட்டிருப்போம். ‘ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கா!’

இல்லைதான். வடிவத்திலும் சரி, அவற்றின் குணத்திலும் சரி.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஐந்திற்கும் தனித் தனி சிறப்புகள் இருக்கின்றன. கை விரல்கள் ஐந்தும் பஞ்சபூதங்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன.

கட்டை விரல் - நெருப்பு
ஆள்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - ஆகாயம்
மோதிர விரல் - நிலம்
சுண்டு விரல் - நீர்

சரி, எதற்கு இந்த பீடிகை தெரியுமா?

குறிப்பிட்ட விரல்களை இணைத்து செய்யும் முத்திரைகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை. முத்திரைகள் மிகுந்த சக்தி பெற்றவை. எனவே, இவற்றைத் தக்க முறைப்படி பயிற்சி செய்து வந்தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.


நோயைப் போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சில முத்திரைகளைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமான குறிப்பு :

1. ஞான முத்திரை

ஞானம் என்பது அறிவைக் குறிக்கும்.


செய்முறை:

உங்களுடைய ஆள்காட்டி விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நன்றாக விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

இம்முத்திரை அறிவு வளத்தை மேம்படுத்தும். கட்டை விரலின் நுனியில் உள்ள பல முக்கிய சுரப்பிகள், உங்கள் ஆள்காட்டி விரலால் அழுத்தி விடுவதனால் செயல்படத் தொடங்கி விடும்.

நேர அளவு:

இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. இதனை நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதோ, நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோஎப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், உங்கள் தேவைக்குத் தக்கவாறு செய்யலாம்.

நன்மைகள்:

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
உங்கள் மூளையைக் கூர்மையாக்கும்.
உங்கள் கவனத்தை அதிகரிக்கும்.

இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

2. பிரித்வி முத்திரை

பிரித்வி என்பது பூமியைக் குறிக்கும்.



செய்முறை:

உங்களுடைய மோதிர விரலின் நுனியால், கட்டை விரலின் நுனியைத் தொடுங்கள். மற்ற மூன்று விரல்களும் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:

உடல் பலவீனத்தைக் குறைக்கும்.

நேர அளவு :

இதற்கும் குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள் :

உங்கள் தோலின் நிறத்தில் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்தும்.
உங்கள் உடலை சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கச் செய்யும்.
நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்.


3. வர்ணா முத்திரை

வர்ணன் என்பது நீரைக் குறிக்கும்



செய்முறை
உங்கள் சுண்டு விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்
உடலில் நீர்த்தன்மையைத் தக்க வைப்பதோடு உடலில் நீரின்மையால் ஏற்படும் நோய்களிலிருந்தும் காக்கும்.

நேர அளவு
இதற்கும் குறிப்பிட்ட நேர வரையறை கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள்
உங்கள் உடலினுள் சுத்தத்தை நிலை நிறுத்தச் செய்யும்
வாயுத் தொல்லையால் ஏற்படும் வலிகளைக் கட்டுப்படுத்தும்.
உங்கள் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கும்.

4. வாயு முத்திரை

வாயு என்பது காற்றைக் குறிக்கின்றது.



செய்முறை

உங்கள் ஆள்காட்டி விரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும். சிறப்பம்சம் உடலில் ஏற்படும் வாயு தொடர்பான நோய்களிலிருந்து விடுபட வைக்கின்றது.

நேர அளவு
இந்த முத்திரையை 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நோயின் வேகம் 12 முதல் 24 மணி நேரத்திற்குள் குறையும். சிறந்த நிவாரணம் பெற இதை இரண்டு மாதங்களுக்கு விடாமல் செய்து வரவும்.

நன்மைகள்
வாத நோய், மூட்டு வலி, கீல் வாதம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்
எவ்வித மருந்தும் உட்கொள்ளாமல் இந்த முத்திரையின் மூலம் பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம்.
எலும்பு தேய்மானத்தையும் சீர்படுத்தும்.
உங்களை வாயு தொல்லையிலிருந்தும் விடுவிக்கும்.

5. சூன்ய முத்திரை :

சூன்யம் என்பது வெற்றிடத்தைக் குறிக்கும்.



செய்முறை
உங்கள் நடுவிரலை சுக்ர மேட்டில் வைத்து அதைக் கட்டை விரலால் அழுத்துங்கள். சிறப்பம்சம் உங்கள் உடம்பின் சோர்வை அது குறைக்கும்.

நேர அளவு
இந்த முத்திரையை 40 முதல் 60 நிமிடங்கள் செய்யலாம். தேவையென்றால் சோர்வு நீங்கும் வரை செய்யலாம்.

நன்மைகள்
உங்களுடைய காது வலியை 4 அல்லது 5 நிமிடங்களில் போக்கும்.
செவிடு மற்றும் புத்தி பேதலிப்பை நீக்கும் - பிறப்பிலிருந்து அல்லாமல் இடையில் ஏற்பட்டிருந்தால் மட்டுமே.

6. சூரிய முத்திரை



செய்முறை

உங்கள் மோதிர விரலை வளைத்து, கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொடுமாறு கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்
உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் மையப்பகுதியை செயல்படுத்தச் செய்கிறது.

நேர அளவு
தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் வரை பயிற்சி செய்ய வேண்டும்.

நன்மைகள்
உடலின் கொழுப்பைக் குறைத்து உடல் பருமனைக் குறைக்கச் செய்யும். படபடப்பைக் குறைக்கும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.


7. பிராண முத்திரை

பிராணன் என்பது உயிரைக் குறிக்கும்.

Mudra

செய்முறை


உங்கள் மோதிர விரலையும் சுண்டு விரலையும் வளைத்து அதன் நுனியால் கட்டை விரலின் நுனியைத் தொடவேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நேராக விரிந்து இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

உயிர்ச் சக்தியை அதிகரித்து உடல் பலவீனத்தைக் குறைக்கும். இரத்தக் குழாயில் உள்ள இறுக்கத்தை நீக்கும்.

நேர அளவு

இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட கால அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள்

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தும்.
கண்கள் தொடர்பான நோய்களை நீக்கும்.
மனச்சோர்வையும், உடலின் வைட்டமின் குறைபாடுகளையும் நீக்கும்.

8. அபனா முத்திரை

அபனா என்பது செரிமானத்தைக் குறிக்கும்

Mudra

செய்முறை

உங்களுடைய நடுவிரல் மற்றும் மோதிர விரலின் நுனி, கட்டைவிரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

இம்முத்திரை, கழிவு மண்டலத்தை சீரமைப்பதால் இது உடல் நலம் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

நேர அளவு

தினமும் 45 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். அதிகமாகச் செய்தாலும் பயன்தான்!

நன்மைகள்

உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவும்.
நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.
மூலம், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணப்படுத்தும்

9. அபனவாயு முத்திரை

இது இதயத்தைக் குறிக்கின்றது.

Mudra

செய்முறை

உங்கள் நடு மற்றும் மோதிர விரல்களின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொடுவதோடு ஆள்காட்டி விரலின் நுனி, கட்டைவிரலின் அடிப்பகுதியைத் தொட வேண்டும். சுண்டு விரல் விரிந்து நேராக இருக்க வேண்டும்

சிறப்பம்சம்

இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம். உடலில் ஏற்படும் வாயுவையும் கட்டுப்படுத்தும்.

நேர அளவு

உங்களுக்கு எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை செய்யலாம். இதய நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும், இதனை தினசரி 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். முடிந்தால் ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்யலாம்.

நன்மைகள்

இதயத்திற்கு வலுவை ஏற்படுத்தி இதயத் துடிப்பைச் சீர்ப்படுத்தும். கழிவுமண்டலத்தைக் காக்கும். வாயுத் தொல்லையை சீர்படுத்தும்.

10. லிங்க முத்திரை

Mudra

செய்முறை

உங்கள் இரண்டு கை விரல்கள் அனைத்தையும் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்திருக்கும் வலக்கை ஆள்காட்டி விரல் நுனியால், அதே கையின் கட்டைவிரல் நுனியைத் தொடவேண்டும். இப்போது அந்த இரு விரல்களின் நடுவில் இடக்கை கட்டை விரல் இருப்பதைப் பார்ப்பீர்கள். அக்கட்டை விரலை நேராக வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நடுவில் நிற்கும் இடக்கை கட்டை விரலுக்கு வலக்கை விரல்கள் இரண்டும் இணைந்து மாலை போல இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்

உடலில் சூட்டை ஏற்படுத்தும். எனவே, இதைச் செய்யும்போது மோர், நெய், தண்ணீர் இவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நேர அளவு

உங்கள் தேவைக்கேற்ப செய்யுங்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இதை அதிகமாகப் பயிற்சி செய்தால் உடலின் சூடு அதிகரிக்கும். குளிர்காலத்திலும் வியர்வையை ஏற்படுத்தும்.

நன்மைகள்

மார்பு சளித்தொல்லையை நீக்கி விடும்.
நுரையீரலுக்கு வலிமை ஊட்டும்.
சளி, இருமல்,கபம் போன்றவற்றை சீர் செய்யும்.
உடலுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

எளிமையாக கைவிரல்களால் போடப்படும் முத்திரைகளால் இத்தனை பயன்களா.. என ஆச்சரியமாக இருக்கிறதா? செயல்படுத்திப் பாருங்கள்; பயன்களை அனுபவத்தில் உணர்வீர்கள்.

1 comment:

  1. evvlo periya vishayathai ivvlo simplea soleetinga.......
    mmmm... impressive..!

    ReplyDelete