இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Saturday, August 28, 2010

புகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி... (28/08/2010)

புகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்று விட்டு வெளியே வரும் உணவை நாம் மறு படி உண்பது இல்லை, அதை போல் தான் வெளியே வரும் புகையும் ஒரு கழிவு.

ஆனால் புகை பிடித்து வெளியே விடுவார் அதை மீண்டும் அவர் சுவாசிப்பார்...அவர் பக்கத்தில் இருப்பவரும் அதை சுவாசிக்க வேண்டும் அவர்கள் வெளியே விடும் புகை மற்றவர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கும் கெடுதல் வீட்டில் குழந்தை இருக்கும் அப்படியே இவர்களும் புகை பிடிப்பார்கள்...நான் தான் புகை புடிக்கின்றேன் குழந்தைக்கு எதுவும் ஆகாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை சிறு வயதில் இருந்தே இந்த புகை உடலுக்கு சென்றால் எதிர் காலத்தில் மிக கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..


புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள்

புகை பிடித்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இது முதன்மையாக மனம் மகிழ்விக்கும் போதைப் பயன்பாட்டினை நிர்வகிக்கும் வழிமுறையாக நடைமுறையிலுள்ளது. அப்போது எரிதலுக்குள்ளாகும் பொருள் போதைப் பொருளிலுள்ள நிகோடின் போன்ற சுறுசுறுப்பான பொருட்களை வெளியிடுகிறது. அவற்றை நுரையீரல் வழியாக உறிஞ்சப்பட்டு கிடைக்கச் செய்கிறது.


சிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா?

புகை பிடிப்பதால் வரும் தீமைகள்

* அடிகடி உடற் சோர்வு ஏற்படும்


* வேலையில் கவனமின்மை,புகை பிடிக்க அடி கடி வெளியே செல்வார்கள்

* ஆஸ்துமா பிரச்னை வரும்

* உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண் இருந்தால் பிறக்கும் குழந்தை ப்ரீமெச்சூர் பேபியாக பிறக்கும்



புத்தாண்டு முதல் அல்லது வரும் பிறந்த நாள் முதல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்திவிடுவேன் என்று சபதம் எடுப்போம் எல்லாம் மறு நாளே முடிந்து விடும் நம் மனதிற்கு நம்மே கட்டுபாடு வைத்து கொள்ள வேண்டும்


புகை புடிப்பதை விடுவதற்கு சில வழி முறைகள்

மற்றவர்கள் புகை பிடித்துக்கொண்டு இருந்தால், அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். புகை அலர்ஜி என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.

* சிகரெட்டிற்குப் பதிலாக, காபி, டீ, ஜூஸ் போன்ற பானங்களைக் குடிக்கலாம்.

* குழந்தைகளுடன் விளையாடலாம். விளையாடினால் நேரம் செல்வதே தெரியாது

* காலையில் யோகா,தியானம், மாலை வாக்கிங்,

* புகை பிடிப்பதால் நமக்கு மட்டும் பிரச்னையில்லை நம் குடும்பத்திற்கும் பிரச்னை என்று நினைக்க வேண்டும்.

நீ மறைந்த பிறகுதான் வைப்பார்கள் கொள்ளி ஏன் உயிருடன் இருக்கும் போதே தினமும் வைத்து கொள்கிறாய் கொள்ளி

No comments:

Post a Comment