இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Thursday, August 26, 2010

சந்திரனை தொட்டது யார்....(26/08/2010)

சென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.

என்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள்.

அந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும், அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.

Mythbusters

http://dsc.discovery.com/fansites/mythbusters/db/science/apollo-moon-landing-photos-fake.html
முதல் படம்:



Mythbusters கேள்விகள்:
படத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.

NASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார், கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.

இரண்டாவது படம்:


MythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.

NASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை. எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.

மூன்றாவது படம்:


MythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது?

NASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.

நான்காவது படம்:


MythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.

NASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.

ஐந்தாவது படம்:




Mythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி? நிழல் மறைத்து கருப்பாக தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.

NASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.

எது எப்படியோ? நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.

கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....

No comments:

Post a Comment