இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, August 22, 2010

இதய வலியின் இயல்புகள்

நெஞ்சுப் பகுதியில் நோ ஏற்பட்டாலே எல்லோரும் மாரடைப்பு ஏற்பட்டு விட்டதோ என்றுதான் அஞ்சுவார்கள். நெஞ்சில் ஏற்படுகிற நோ எல்லாமே இதயத்தில் ஏற்படுகிற நோ அல்ல. ஏற்பட்டிருக்கும் நோவின் சில தன்மைகளை வைத்து இது இதய வலியா அல்லது வேற ஏதாவது வலியா என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடியும்.

இதய வலியின் சில இயல்புகள்....

  1. வலியானது நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் ஏற்படும்
  2. இந்த வலியானது இறுக்கிப் பிடிக்கின்ற ஒரு உணர்வினை ஏற்படுத்தும்
  3. வலியானது கழுத்து மற்றும் கை பகுதிகளுக்கு பரவிச்செல்லும்
  4. வலியோடு நெஞ்சு படபடப்பு , வியர்வை போன்றவை ஏற்படுதல்
  5. வலியோடு மூச்செடுக்க கஷ்டம் ஏற்படுதல்

எல்லாவற்றிற்கும் மேலாக வலியானது நடக்கும் போது அல்லது வேலை செய்யும் போது அதிகரித்தல்.

இப்படியான இயல்புகளைக் கொண்ட ஒரு வலி உங்கள் நெஞ்சில் ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

ஆனாலும் இந்த மாதிரியான இயல்பு மாரடைப்பு ஏற்படும் எல்லோருக்கும் ஏற்படாது. குறிப்பாக நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு, வலி இல்லாமலேயே மாரடைப்பு ஏற்படலாம்.

கஸ்ரைற்ரிஸ் (Gastritis எனப்படும் இரப்பைஅலர்ச்சி (அல்சர்) காரணமாக ஏற்படும் வலியினை சில வேளை இதய வருத்தத்தால் (மாரடைப்பால்) வருகின்ற வலி போல எண்ணத் தோன்றும்.

எவ்வாறு இவற்றை பிரித்தறியலாம்?


Gastritis காரணமாக ஏற்படும் வலி...

எரிவுத் தன்மை போன்றது.

இது வயிற்றின் மேலப் பகுதியில் ஏற்படும். சில பேரில் இந்த எரிவுத் தன்மை தொண்டை நோக்கி மேலே செல்லும் பொது அது நெஞ்சுவலி போல தோன்றும்.

உணவோடு சம்பந்தப் பட்டதாகக் இந்த வலி ஏற்படும்
சில குறிப்பிட்ட உணவின் பின் இந்த வலி அதிகரிக்கும்.

மற்றும் வியர்த்தல் , நெஞ்சு படபடப்பு, மூச்செடுக்க கஷ்டம் போன்றவை ஏற்படாது .




No comments:

Post a Comment