இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Saturday, August 28, 2010

System Folder Lock (28/08/2010)

அந்தரங்கம் இல்லாத மனிதர் யார் உள்ளார்கள். நமக்கென்றுசிலஅந்தரங்க டாக்குமென்டுகள்.படங்கள்.பைல்கள்.வீடியோக்கள்.பாடல்கள் என இருக்கும்.மற்றவர்கள் பார்வையிலிருந்து நாம் அதை கணிணியில் எவ்வாறு பாதுகாத்து வைப்பது? இநத கவலையை போக்கவே இந்த சிறிய சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்இதை கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பாஸ்வேர்ட் கொடுத்து பைலை ஒப்பன் செய்யவும். சாவி வந்து திறந்து உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.அதில் தேவையான பைலை எடுத்துவந்து போட்டுவிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மீண்டும் வெளியே வந்து கீழ்கண்ட விண்டோவில் Lock கிளிக்செய்யவும்.
சாவி யானது விட்டலாச்சரியா படத்தில் வருவது போல வந்து போல்டரை லாக் செய்து கொள்ளும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அவ்வளவுதான். உங்கள் பைல் லாக்கரில் பத்திரமாக இருக்கும். நீங்கள் மீண்டும் பைலை பார்க்கவேண்டுமானால் இந்த லாக்கர் ஐ-கானை கிளிக் செய்யவேண்டும்.வரும் படத்தில் ஓப்பன் கிளிக் செய்யவேண்டும். இப்போது உங்களை பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேரட் கொடுத்தவுடன் உங்கள் பைலானது ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள்.

No comments:

Post a Comment