இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Sunday, August 22, 2010

மது அருந்தும் நண்பர்களுக்காக!

மது உடலுக்குக் கேடு !
இது உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனாலும் மது மிகவும் அதிகமாக பாதிப்பது ஈரலை. ஏனெறால் மது நமது ஈரலில் தான் சமிபாடு அடைகிறது.
நாம் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது அது ஈரலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தி நமக்கு நோய்களை ஏற்படுத்தும்.

நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் உங்களில் கீழே உள்ள ஏதாவது அறிகுறிகள் உள்ளதா என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்...

  1. வயிற்று வலி
  2. உமிழ் நீர் குறைந்து உலர்ந்த வாய்
  3. அதிகமான தாகம்
  4. தொடர்ச்சியான காய்ச்சல்
  5. உடல் பலவீனம்
  6. வயிற்று வீக்கம்
  7. கண் மஞ்சள் நிறமடைதல்
  8. பசி குறைதல்
  9. வாந்தி வருகின்ற உணர்வு
  10. உடல் நிறை திடீரென அதிகரித்தல்
  11. கருப்பு நிறத்தில் மலம் கழித்தல்
  12. ரத்த வாந்தி எடுத்தல்
  13. ஆண்களில் மார்பு பெரிதாகுதல்
  14. சிந்திக்கும் ஆற்றல் குறைதல்
  15. உள்ளங்கையில் சிவப்பு நிறமாக காணப்படுதல் .
மது அருந்துபவர்களே இதில் ஏதாவது அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.அதற்கு முன்பு மது அருந்துவதை விட்டு விடுங்கள்.

No comments:

Post a Comment