இங்கு இருப்பவை எதுவும் எனக்கு சொந்தமில்லை. மற்றவர்களிடமிருந்து எனக்கு பிடித்ததை எடுத்து இங்கு கொடுத்துள்ளேன்,உங்களுக்கும் பிடிக்கும் அல்லது பயன்படும் என்ற நம்பிக்கையில்...

Monday, August 30, 2010

சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை.... (30/08/2010)


எல்லா தமிழ் படத்திலும்... வில்லன் அனேகமாக கதாநாயகியை கடத்தி வந்து வைத்து இருக்கும் இடமும்.. அதிக சண்டைகாட்சிகள் எடுத்த இடமும் இந்த இடம்தான்... ஆனால் இந்த இடம் அடைந்து இருக்கு மாற்றம் என்பது கனவில் நினைத்து கூட பார்க்கமுடியாத மாற்றம்....

மால் மூன்று மாடிகளுடன் பல எக்கரில் பறந்து விரிந்து கிடக்கின்றது.. பெங்களுர் போரமை பார்த்தவர்களுக்கு, இந்த மால் பெரிய ஆச்சர்யத்தை உண்டு செய்யாது... காரணம் ஏறக்குறைய அதே போல் இருக்கின்றது...... பறந்து விரிந்த பார்க்கிங் ஏரியா...பேஸ்மென்ட்டில் மூன்று அடுக்கு பார்க்கிங்....

உள்ளே நுழைந்ததும் கடுமையான குளிர் வாட்டி வதைக்கும்.... அந்த அளவுக்கு ஏசி போட்டு இருப்பார்கள்.... எல்லோரையும் செக் செய்துதான்.. உள்ளே அனுப்புவார்கள்...




இருப்பதிலேயே பெரிய கடை லைப் ஸ்டைல் கடைதான் இரண்டு தளத்தை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார்கள்... அவர்கள் கடையில் மினி எக்சலேட்டர் வைத்து இருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.... உள்ளே எல்லா பொருட்களும், யானைவிலை குதிரை விலை. எல்லா இடத்திலும் மாடல் பொம்மைகள் ஸ்டைலாக உட்கார வைத்து இருந்தார்கள்...




டாய்லட் ரூம் மிக நேர்த்தியாக விசாலமாக கட்டி இருக்கின்றார்கள்...எதாவது விபத்து என்றால் அவசரகால வழி பெரியதாகவே இருக்கின்றது.. ஸ்கைமால் போல் எல்லாவற்றையும் குறுக்கி வைக்கவில்லை.... இரண்டாவது இவர்களுக்கு கடலும் காவேரியும் போல் இடம் இருப்பதால் எல்லாவற்றையும் மிக பெரிதாக கட்டி இருக்கின்றார்கள்...நிறைய இடங்களில் இறங்கி ஏற லிப்டு எக்ஸ்லேட்டர்கள் வைத்து இருக்கின்றார்கள்.....
(மாலில் இருக்கும் அந்த இரண்டு லிப்ட்கள்..)

இந்த மாலில் லிப்ட் டிராண்ஸ்பரண்டாக இருக்கின்றது... கண்ணாடியில் செய்து வைத்து இருப்பதால் அதில் எத்தனை பேர் போகின்றார்கள்... என்பதை எந்த தளத்தில் இருந்தும் பார்த்துக்கொள்ளலாம்...






எல்லாவற்றையும் விட 3ம் தளத்தில் இருக்கும்... குழந்தைகளுக்கான விளையாட்டு மையம் இருக்கின்றது... அந்த இடம் போகும் அத்தனை பேருக்கும் நிச்சயம் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும்....குட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடும் அந்த இடம் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்....

(குழந்தைகளின் மகிழ்ச்சி)
சின்ன பிள்ளைகள் கார் மற்றும் பைக் வீடியோ கேம் விளையாடுகின்றார்கள்...டேஷிங் கார் இருக்கின்றது... அதை விட ஒரு ரவுண்டாக ஒரு சமாச்சாரம் இருக்கின்றது அதில் ஏறி உட்கார்ந்ததும் ஆட ஆரம்பிக்கின்றது சாப்பிட் சாப்பாட்டை வாந்தியாக எடுக்கும் வரை ஆட்டுகின்றார்கள்...அதிலும் கொஞ்சம் அழகான இளம் பெண்கள் ஏறிவிட்டால் இன்னும் கொஞ்ச நேரம் அதிகம் ஆடுகின்றது...

(பால் பொந்தில் போடும் விளையாட்டு...)




ஒரு பெரிய புட் கோர்ட் இருக்கின்றது சென்னையில் இருக்கும் பிரபல உணவு கடைகளை அங்கே கடை பரப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன...மொத்தமாக ஒரு இடத்தில் 500 அல்லது ஆயிரம் பணம் கட்டிவிட்டால் ஒரு கார்டு கொடுக்கின்றார்கள்.. அதை வைத்து தேய்க்க தேய்க்க பணம் சாப்பிடும்பொருள் கொடுக்கின்றார்கள்... ஹாட்சிப்சில் மினி காப்பிக்கு ஒரு கப் வைத்து இருப்பார்கள்...அந்த கப்பு போல் ஒரு கப்பில் இரண்டு சின்ன கரண்டி ஜஸ்கிரீம் சொரண்டி வைத்து விட்டு50 ரூபாய் என்று சொல்வார்கள்..

அதாவது பாக்கெட்டில் இருந்து காசு எடுத்து கொடுக்கும் போதுதான்... ஐயோ
இவ்வளவு பணமா??? என்ற எண்ணம் தோன்றும்... ஆனால் முன்னையே பணம் கட்டிவிட்டால் அந்த எண்ணம் தோன்றாது அல்லவா அதுக்குத்தான்.. முன்னையே பணம் கட்ட சொல்கின்றார்கள்..இதே டெக்னிக்தான்.. அந்த கேம் சோனிலும் நடக்கின்றது....

எல்லோரும் சாப்பிடுவதை பார்க்கும் போது அவர்கள் வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெகு நாள் ஆனது போல் சாப்பிடுகின்றார்கள்...நிறைய பெண்கள்தன் நண்பர்களுடன் வந்து சாப்பிட்டு சிரித்து ,உதடு துடைத்து செல்கின்றார்கள்... காதலன்கள் பர்ஸ் கிழியும் இடத்தில் இந்த இடமும் ஒன்று....

மேலே சத்தியம் தியேட்டரின் எஸ்கேப்பில் பாரினில் இருப்பது போல் அந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தை செட் செய்து வைத்து இருக்கின்றார்கள்....
(மூன்றாம் மாடியில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு ஒரு எரியல் ஷாட்)
மாலில் பார்க்கிங் பைசாவில் நம்மை நிறைய கொள்ளை அடிக்கின்றார்கள்...டைம் பாஸ் செய்ய ஏற்ற இடம்தான்.... ஆனால் எல்லாம் அதிக விலை.

இன்னும் மால் முழுமை அடையவில்லை.. நிறைய வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது...காதலர்களுக்கு நகரின் மத்தியில் ஒரு இடம் கிடைத்து இருக்கின்றது இளைப்பாற.......

நடுத்தர குடும்பம் உள்ளே போய் சுற்றி பார்க்கலாம் ஆனால் எதையும் வாங்க முடியாது... அப்படி வாங்க வேண்டும் என்றால் நிறைய யோசிக்க வேண்டும்...

No comments:

Post a Comment